PM Kisan Yojana: பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இந்த திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிசான் கிரெடிட் கார்டை பிரதமர் கிசான் யோஜனாவுடன் (PM Kisan Yojana) இணைத்த பின்னர், 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டதில் இதுவரை 1.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் கார்டுகள் (Kisan Credit Card) வழங்கப்பட்டுள்ளன. மேலும்  விவசாயிகள் பயன் அடையும் வகையில் இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் கடனாக 2 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ALSO READ | PM Kisan: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இரட்டை நன்மை பெற இதை செய்யுங்கள்!


கிசான் கிரெடிட் கார்டைப் பெற இப்போது விவசாயிகள் ஒரு பக்க படிவத்தை மட்டுமே நிரப்ப வேண்டும். இந்த படிவத்தை pmkisan.gov.in வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக எவ்வித KYC செய்ய விவசாயிகள் தேவையில்லை. 


கிசான் கிரெடிட் கார்டு
இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கும் விவசாயியின் குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 75 ஆக இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க இணை விண்ணப்பதாரர் தேவைப்படுவார்கள்.


கிசான் கிரெடிட் கார்டின் கீழ், ஒரு விவசாயி விவசாயத்திற்கு ரூ .3 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் 4 சதவீத ஆகும். விவசாயிகளுக்கு கூடுதலாக, கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் கிசான் கடன் அட்டையின் கீழ் விவசாய கடன்களுக்கும் விண்ணப்பிக்கலாம். கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத்துறை 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .2 லட்சம் வரை கடன் பெறலாம்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR