PM Kisan Yojana: சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தாட்ச வருமான ஆதரவை வழங்கும் விதமான இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான் யோஜனா)  திட்டமாகும்.  கடந்த 2019ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது.   இது நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய நிலத்துடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதியுதவி அளிக்கப்படும். பிஎம் கிசான் யோஜனா திட்டமானது 14-வது தவணையை அடுத்த சில வாரங்களில் வெளியிட மத்திய அரசு தயாராக உள்ளது.  பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2000 என்று மூன்று தவணையாக மொத்தம் ரூ.6000 வழங்கப்படுகிறது.  மொத்தத்தில், தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6000ஐ அரசு நேரடியாக வரவு வைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி


பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசயிகளுக்கு இதுவரையில் 13 தவணைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.  பெரும்பாலான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில், சில விவசாயிகளுக்கு மட்டும் தவணையாக ரூ.4000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதாவது அறிக்கைகளின்படி, 13வது தவணையில் ரூ.2000 பெறாத விவசாயிகளுக்கு 14வது தவணையோடு சேர்த்து மொத்தமாக ரூ.4000 வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


பிஎம் கிசான் யோஜனா மூலம் 13-வது தவணைக்கான பணம் பெரும்பாலான விவசாயிகளின் கணக்கில் வரவில்லை.  பலரும் வெரிஃபிகேஷன் பணியை செய்து முடிக்காததால் தவணை தொகை கிடைக்காமல் போனது, தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் வெரிஃபிகேஷன் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டனர்.  எனவே அந்த விவசாயிகளுக்கு இப்போது ரூ.2000க்கு பதிலாக ரூ.4000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  தகுதியான விவசாயிகள் தங்களது பெயர்களை அதிகாரப்பூர்வ பஎம் கிசான் இணையதளத்தில் எளிதாகச் சரிபார்த்து கொள்ளலாம்.  அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், உள்ள விவசாயிகள் கார்னர் பகுதிக்கு நீங்கள் செல்ல வேண்டும், பெனிஃபிஷியரி ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.  அடுத்த பக்கத்தில், பிஎம் கிசான் யோஜனா மூலம் கிடைக்கும் பலன்களைப் பெற நீங்கள் தகுதியுள்ளவரா இல்லையா என்பதைக் கண்டறிய உங்கள் விவரங்களை உள்ளிட வேண்டும்.


மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இந்த சேவைகள் இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ