PM SVANidhi Yojana: ஆதார் அட்டை இருந்தால் போதும்... ரூ.50,000 கடன் பெறலாம்!
PM SVANidhi Yojana: மத்திய அரசு, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பிரதமர் சிவ நிதி திட்டம்.
PM SVANidhi Yojana Details in Tamil: நாட்டில் கொரோனா நெருக்கடி நிலவிய காலகட்டத்தில், தொழில் முனைவோர்களையும் வணிகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கிய, பல்வேறு திட்டங்களில் ஒன்றுதான் பிரதமர் ஸ்வநிதி திட்டம். சிறிய அளவில் வணிகத்தை தொடங்க விரும்புபவர்களுக்கு கடன் உதவி அளிக்கும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.
கொரோனா காலகட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது தெருவோர வியாபாரிகள் தான். தொழில் பெருமளவு பாதித்த நிலையில், அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு கொண்டு வந்த திட்டம் பிரதமர் ஸ்வநிதி திட்டம். இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதால் இந்த திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
பிணை இல்லாத கடன்
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை நடத்த, அரசிடம் இருந்து பிணை இல்லாத கடன் பெறலாம். காய்கறி விற்பவர்கள், பழம் பூ விற்பவர்கள், தெருவோரத்தில் பல்வேறு விதமான கடைகள் வைத்திருப்பவர்கள், சிறிய அளவில் துரித உணவு கடைகளை வைத்திருப்பவர்கள் என பலர் இந்த கடன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 50 ஆயிரம் வரை கடன் வழங்குகிறது. எனினும் 50 ஆயிரம் கடன் வாங்குவதற்கு, உங்கள் மீதான நம்பகத்தன்மையை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் முதலில் ரூபாய் 10,0000 கடன் கிடைக்கும், கடனை உரிய காலத்தில் முறையாக திருப்பிச் செலுத்திய பிறகு, இரண்டாவது முறை கடன் வாங்குகையில் இரட்டிப்பு தொகையை பெறலாம். அதாவது ரூ.20,000 பெறலாம்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கான Blue Aadhar Card: விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
ரூபாய் 50,000 கடன் பெற செய்ய வேண்டியது என்ன
உதாரணத்திற்கு நீங்கள் தெருவோரத்தில், இட்லி தோசை விற்பவர் என வைத்துக் கொள்வோம். உங்கள் தொழிலை செய்ய, இந்தத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு முதலில் ரூபாய் 10,000 உதவி கிடைக்கும். அந்த கடன் தொகையை நீங்கள் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், பின்னர் இதன் கீழ் ரூபாய் 20,000 கடன் பெறலாம். அதையும் உரிய நேரத்தில் திருப்பச் செலுத்தினால், உங்களுக்கு ரூபாய் 50,000 கடன் கிடைக்கும். இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த கடனுக்கு அரசு மானியமும் கிடைக்கும்.
பிணை இல்லாத கடன் திட்டம்
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வாங்க உங்களுக்கு எந்தவிதமான பிணையும் தேவையில்லை. உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பின் கடன் தொகை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும்.
கடன் பெற தேவையான ஆவணங்கள்
பிரதமர் ஸ்வாதி திட்டத்தின் கீழ் கடன் வாங்க ஆதார் அட்டை இருந்தால் போதுமானது. வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. நீங்கள் வாங்கிய கடனை ஒரு வருட காலத்திற்குள் திருப்பச் செலுத்தலாம். அதனை மாத தவணையாகவும் திரும்பச் செலுத்தலாம். ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற ஏதேனும் ஒரு அரசு வங்கியில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் தொலைநோக்கு பார்வை
கொரோனா நெருக்கடி காலகட்டத்திற்கு பிறகு, பொருளாதாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு எடுத்த தொலைநோக்கு திட்டங்களில் இதுவும் ஒன்று. இரண்டாயிரத்தி கடந்த ஆண்டு ஜூலை மாதம், தொழில் முனைவோர்களையும் தெருவோர வியாபாரிகளையும், ஊக்குவிக்கும் வகையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இதற்கான பிரச்சாரத்தை தொடக்கியது. மத்திய அரசின் முயற்சியின் காரணமாக லட்சக்கணக்கானோர் இதன் கீழ் கடன் பெற்று, தொழில் முனைவோர் மற்றும் தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியன் ரயில்வேயின் புதிய விதி.. இனி டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ