இந்தியன் ரயில்வேயின் புதிய விதி.. இனி டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்

ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி ஐஆர்சிடிசி பேமண்ட் கேட்வே மூலம் பணம் செலுத்தும்போது, எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நமக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கப்பட்டுவிடும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2024, 04:11 PM IST
  • பயணிகள் அற்புதமான பயனைடைவீர்கள்.
  • பயணிகள் உடனடியாக ரீஃபண்ட் தரப்படும்.
  • பேமண்ட் கேட்வேயை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது.
இந்தியன் ரயில்வேயின் புதிய விதி.. இனி டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும் title=

ஐஆர்சிடிசி இந்திய ரயில்வேயின் புதிய விதி: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும். அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும்.

இந்நிலையில் தற்போது நாம் இந்திய ரயில்வேயின் (INDIAN RAILWAY RULES) ஒரு முக்கியமான விதியைப் பற்றி தான் காணப் போகிறோம். இதன் மூலம் பயணிகள் அற்புதமான பயனைடைவீர்கள்.

எனவே இனி உறுதி செய்யப்பட்ட டிக்கெட் அதாவது கன்பர்ம் டிக்கெட்டை நீங்கள் பெற்ற பிறகு பயணிகளின் கணக்கில் இருந்து ரயில்வே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில், டிக்கெட்டை ரத்து செய்தால், பயணிகள் உடனடியாக ரீஃபண்ட் தரப்படும். இதற்கான தற்போது ரயில்வே துறையால் பேமண்ட் கேட்வே சேவையான IRCTC IPay அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ,மேலும் மற்ற பேமண்ட் சேவையில் உள்ளது போலவே IRCTC IPay பேமண்ட் சேவையிலும், ஆன்லைன் (Online), டெபிட் கார்டு (Debit Card), கிரெடிட் கார்டு (Credit Card) மற்றும் யூபிஐ (UPI) போன்ற வழிகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவற்றை எளிதாக கையாளவும் முடியும்.

மேலும் படிக்க | Employment: careers.google.com தமிழர் சுந்தர் பிச்சை வேலை செய்யும் கூகுளில் உங்களுக்கும் வேலை வேண்டுமா?

பொதுவாக பயணத்திற்காக ஐஆர்சிடிசி (https://www.irctc.co.in/nget/train-search) இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரயில் டிக்கெட் கிடைத்தாலும் சரி அவை கிடைக்காவிட்டாலும் சரி நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் உடனடியாக கழிப்படும். இதில் ஒரு வேளை உங்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்காவிட்டால் பிடித்தம் செய்த பணத்தை நீங்கள் வங்கி கணக்கில் திரும்பிப் பெற குறைந்தது 3 நாட்களாவது எடுத்துக்கொள்ளும். 

இந்நிலையில் இனி மூன்று நாட்கள் காத்திருக்க தேவையில்லை, ஏனெனில் இனி பிடித்தம் செய்த பணம் உடனடியாக உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இதற்கான பேமண்ட் கேட்வேயை ஐஆர்சிடிசி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது.

அதன்படி இனி பணப்பரிவர்த்தனைக்கு ஐஆர்சிடிசி ஐபே (IRCTC IPay) என்ற பேமண்ட் கேட்வே சேவையை பயன்படுத்தலாம். ஐஆர்சிடிசி ஐபே பேமண்ட் கேட்வே மூலம் பணம் செலுத்துவதில் செலுத்தும்போது, எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நமக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கப்பட்டுவிடும். மாறாக நமக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் கூட உடனே நம்முடைய வங்கிக் கணக்கில் பணம் வந்து விழுந்துவிடும்.

முன்னதாக இது தொடர்பாக பொது மக்கள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஐஆர்சிடிசி ஐபே என்னும் பேமண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th pay commission: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட், அடுத்த மாதம் 2 குட் நியூஸ் வருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News