பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...
மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
PM-Vidyalaxmi Yojana: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உயர்கல்வியைத் தொடர நிதி உதவியை எதிர்பார்க்கும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இத்திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்விக் கடனைப் போன்றே இது ஒரு நிதி உதவித் திட்டமாக இருந்தாலும், இந்தத் திட்டம் வழக்கமான கல்விக் கடனை பல வகைகளில் சிறந்தது.
மத்திய அரசின் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்பது இந்திய அரசின் முன்முயற்சியாகும், இதன் நோக்கம் உயர்கல்விக்காக மாணவர்களுக்கு எளிதான கடன் உதவியை வழங்குவதாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கடன் மற்றும் பிற நிதிச் சேவைகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உயர்கல்விக்குத் தேவையான நிதி உதவியைப் பெற வாய்ப்பளிக்கிறது. மறுபுறம், கல்விக் கடன் என்பது மாணவர்களுக்கு, உயர் கல்விக்காக வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடனாகும். கல்விக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் பிற செலவுகளுக்காக கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை வழக்கமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஸ்காலர்ஷிப் போன்ற பிற சலுகைகள்
மேலும் வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தில் கடன்கள் மட்டுமின்றி ஸ்காலர்ஷிப்பையும் வழங்குகிறது. கல்வியுடன், வங்கிக் கடன்கள், உதவித்தொகைகள் மற்றும் கடன் சலுகைகள் போன்ற பிற சலுகைளையும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பெறுகிறார்கள். அதே சமயம், கல்விக் கடனில், கடன் வசதி மட்டுமே உள்ளதால், வட்டியுடன் பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டும். இதில் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதன் மூலம் அவர்கள் கல்வியை எளிதாக நிறைவு செய்ய உதவுவது.
திட்டத்தின் கீழ் பலன் பெறும் மாணவர்கள்
ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம். 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும். பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் பலனை பெற வெளிப்படைத்தன்மையுடன் முற்றிலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் தொகைக்கு உத்தரவாதம் வழங்குவதால், 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் மாணவர்களுக்கு எளிதாக கடன்களை வழங்கும்.
மேலும் படிக்க | போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... எதையும் நீக்காமலேயே சிக்கலை தீர்க்கலாம்
HEI எனப்படும் உயர் கல்வி நிறுவனங்கள்
இத்திட்டத்தின் கீழ், சிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு பிணையில்லாத கடன் வழங்கப்படும். தகுதியான HEI எனப்படும் உயர் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த பட்டியலில் NIRF தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், குறிப்பிட்ட வகை பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். கூடுதலாக, அனைத்து மாநில அரசாங்கத்தால் நடத்தப்படும் HEI கள் தரவரிசையில் 101 மற்றும் 200 க்கு இடையில் உள்ள மற்றும் அனைத்து மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களும் தகுதிபெறும். இந்தப் பட்டியல் சமீபத்திய NIRF தரவரிசைகளுடன் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறை
பிரதம மந்திரி வித்யாலட்சுமி யோஜனாவின் கீழ் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறை எளிமையானது மற்றும் நெகிழ்வானது. இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்த பிறகு கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியைப் பெறுகிறார்கள். சில திட்டங்களில் சலுகைகள் வழங்கப்படுகின்றன மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாக இருக்கலாம். கல்விக் கடனின் கீழ் கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையிலும் பொதுவாக மாணவர் தனது கல்வியை முடித்த பிறகு கடனை செலுத்தும் வகையில் மாணவருக்கு "கூலிங் பீரியட்" வழங்கப்படுகிறது, ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடுமையான விதிமுறைகள் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ