Pradhan Mantri Awas Yojana: மலிவு விலை வீடுகளுக்கான அரசாங்க திட்டத்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு நல்ல செய்தி. ஆகஸ்ட் 9 அன்று, 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை (Pradhan Mantri Awas Yojana Gramin) செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PMAY -இன் கீழ் வீடு கட்ட நிதி உதவி


அமைச்சரவையில் அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலின் கீழ், வீடுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சமவெளிப் பகுதிகளில் தற்போதுள்ள ரூ.1.2 லட்சம் யூனிட் அசிஸ்டெண்டுகளிலும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களான ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் ரூ.1.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகள் 


- இத்திட்டத்தின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


- இதன் மூலம் சுமார் 10 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


- இதற்காக 2024-25 முதல் 2028-29 வரை மொத்தம் ரூ.3,06,137 கோடிக்கான செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


- இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,05,856 கோடியாகவும் மாநில அரசுகளின் பங்கு ரூ.1,00,281 கோடியாகவும் இருக்கும். 


மார்ச் 31, 2024க்குள் முடிக்கப்படாத மீதமுள்ள 35 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் முதலில் முடிக்கப்படும் என்றும், அதன் பிறகுதான் முந்தைய கட்டத்தின் 2.95 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் மத்திய அரசு (Central Government) செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் அளித்த அப்டேட் இதோ


நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகள்


இது மட்டுமின்றி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) 2.0 க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் 1 கோடி நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகள் கட்ட, வாங்க அல்லது வாடகைக்கு வீடு எடுக்க நிதி உதவி வழங்கப்படும். 


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது என்ன?


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “கடந்த 10 ஆண்டுகளில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் 4 கோடி வீடுகள் வந்துள்ளன. நாடு முழுவதும் மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் 3 கோடி புதிய வீடுகளை செயல்படுத்துவது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.3,60,000 கோடி. 2 கோடி வீடுகள் கிராமப்புறங்களிலும், 1 கோடி வீடுகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும்." என்று கூறினார்.


பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 


ஜூன் 2015 இல் அரசாங்கம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) அதாவது PMAY ஐ அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் கிராமப்புற இந்தியா மற்றும் நகர்ப்புற இந்தியா ஆகிய இரண்டிலும் செயலில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில், இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம் (PMAY-G) மற்றும் நகரங்களில், இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) என்ற பெயர்களில் இயக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ