Jan Aushadhi Kendra: நாட்டின் மத்திய மற்றும் மாநில அரசுகள், குடிமக்களின் நலனுக்காக பல்வேறு வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. சில திட்டங்கள் மூலம் அரசாங்கம் விவசாயத்திற்கு நிதியுதவி வழங்குகிறது, சில சமயங்களில் நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் கடன்களை வழங்கி அவர்களைத் தன்னிறைவுபடுத்துகிறது. இப்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த வகையில் ஒரு பெரும் முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிசம்பருக்குள் மேலும் மருந்தகங்கள் திறப்பு


பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா (PMBJP) எனும் மருந்தகங்களை திறப்பதற்கு 2 ஆயிரம் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களை அனுமதிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், 1,000 ஜன் ஔஷதி கேந்திராக்கள் திறக்கப்படும். அதேசமயம், மீதமுள்ள 1,000 மையங்கள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படும். zeenews.india.com/tamil/videos/amit-shah-will-visit-tamil-nadu-on-june-11-448111


மேலும் படிக்க | உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ₹100 கள்ள நோட்டு இல்லையே... கண்டறிவது எப்படி!


இதுவரை பல மையங்கள் திறக்கப்பட்டுள்ளன


நாடு முழுவதும் இதுவரை 9,400 க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் சுமார் 1,800 மருந்துகள், 285 மருத்துவ சாதனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜன் ஔஷதி கேந்திராவில் கிடைக்கும் மருந்துகள் வெளிச்சந்தையில் கிடைக்கும் பிராண்டட் மருந்துகளை விட 50% முதல் 90% வரை மலிவானவை என்பது குறிப்பிடதக்கது. 


இது இருந்தால் போதும்


இது மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. சிறந்த விஷயம் என்னவென்றால், கிராமப்புற மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளும் இதன்மூலம் எளிதாகக் கிடைக்கும். ஜன் ஔஷதி கேந்திராவைத் திறக்க, 120 அடிக்கு சொந்தமாக அல்லது வாடகைக்கு இடம் இருக்க வேண்டும். ஜன் ஔஷதி கேந்திராவைத் திறப்பதற்கு மருந்தாளரின் சான்றிதழ் கட்டாயத் தகுதியாகும். நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.


ரூ. 5 ஆயிரம் கட்டணம் 


பிரதமர் ஜன் ஔஷதி கேந்திரா janaushadhi.gov.in/online_registration.aspx என்ற இணையத்தளத்திற்கு செல்லவும். இதற்கு, திரும்ப கோர இயலாத கட்டணமாக, 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இருப்பினும், பெண் தொழில்முனைவோர், மாற்றுத்திறனாள், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் ஆர்வமுள்ள மாவட்டங்களின் தொழில்முனைவோர்களுக்கு இந்த நிதி ஆயோக் அறிவிக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது. 


இதுமட்டுமின்றி, மத்திய அரசு இளைஞர்கள் மற்றும் தொழில்முன வாருக்கு பலவகையில் உதவி வருகிறது எனலாம். குறிப்பாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டம் மூலம் தொழில் தொடங்குவோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், குடிமக்களுக்கு வழங்கப்படும் கடன் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஷிஷு கடனின் கீழ் ரூ.50,000 வரை எடுக்கலாம். கிஷோர் கடன் 50,000 க்கு மேல் மற்றும் 5 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ளது. தருண் கடன் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது. 


மேலும் படிக்க | தொழில் தொடங்க கடன் வேண்டுமா... ஈஸியாக இந்த திட்டத்தில் வாங்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ