வெறும் ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை வருமானம் தரும் அசத்தல் திட்டம்!
Post Office Scheme: கிராமப்புற மக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
Post Office Scheme: அரசுக்கு சொந்தமான அஞ்சல் துறை இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் முக்கியமான நிதி ஆதாரமாக விளங்குகிறது. கிராமப்புற குடிமக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்கவும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவும் பல்வேறு முயற்சிகளை இந்திய அஞ்சல் அலுவலகங்கள் வழங்குகிறது. நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மக்களுக்கு நல்ல வருமானத்தை கிடைக்க செய்யும் வகையிலும் இந்திய அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும், இதனை ஐந்து வருட கவரேஜூக்குப் பிறகு எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றப்படலாம். பாலிசி 55, 58 அல்லது 60 வயது வரை குறைக்கப்பட்ட பிரீமியங்களை வழங்குகிறது, இது பாலிசிதாரர்கள் தங்கள் பலன்களை அதிகரிக்க உதவுகிறது.
கிராம் சுரக்ஷா யோஜனா மக்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது, இந்த திட்டத்தில் சேர்ந்துகொள்ள குறைந்தபட்ச வயது 19 மற்றும் அதிகபட்ச வயது 55 ஆகும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 மற்றும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். இந்த திட்டத்தில் பங்களிப்பதன் மூலம் பாலிசிதாரர்கள் நான்கு வருட பாதுகாப்புக்குப் பிறகு கடன் வசதியைப் பெறலாம், இருப்பினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திட்டத்தை நீங்கள் கைவிட்டால் உங்களுக்கு போனஸ் கிடைக்காது. பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசியை 59 வயது வரை எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றிக்கொள்ளும் வசதி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டிய வயது 55, 58 அல்லது 60 ஆகும். பாலிசியை சரண்டர் செய்தால், குறைந்த காப்பீட்டுத் தொகைக்கு விகிதாசார போனஸ் வழங்கப்படும், ஒரு வருடத்திற்கு ரூ 1000 ரொக்கத்திற்கு போனஸ் தொகை ரூ 60 ஆகும். கிராம் சுரக்ஷா யோஜனாவின் கீழ், பாலிசிதாரர்கள் ஒவ்வொரு நாளும் வெறும் ரூ.50 பங்களிப்பதன் மூலம் திட்டத்தின் முதிர்வில் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறலாம். ஒரு நாளைக்கு நீங்கள் ரூ.50 செலுத்தினால் ஒரு மாதத்தில் உங்களின் மொத்த முதலீடு ரூ.1,515 ஆக இருக்கும். இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு பாலிசிதாரருக்கு ரூ.34.60 லட்சம் கிடைக்கும். 55 வருட காலத்திற்கான முதிர்வு தொகை ரூ.31,60,000, 58 வருட காலத்திற்கான முதிர்வு தொகை ரூ.33,40,000, மற்றும் 60 வருட காலத்திற்கான முதிர்வு தொகை ரூ.34.60 லட்சம் ஆகும்.
மேலும் படிக்க | முக்கிய அறிவிப்பு! இனி இந்த தொகைக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்ய முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ