Post office saving scheme: பெரும்பாலான மக்கள் இந்தியா அஞ்சலகத்தின் (Post Office) சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது சிறந்ததாக கருதுகின்றனர். தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான புதிய வட்டி விகிதங்கள் குறித்து மத்திய அரசாங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. இந்திய தபால் துறையின் புதிய சுற்றறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் (Post Office Saving Schemes) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றாமல் வைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சுற்றறிக்கை ஜூலை 1, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தபால் அலுவலக சேமிப்பு (Post Office Saving) கணக்கில் 5 ஆண்டு ஆர்.டி மற்றும் கால வைப்புக்கான புதிய வட்டி விகிதம் பற்றி இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்:


ALSO READ | ₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்!


தபால் அலுவலக சேமிப்பு கணக்கு: இதில் 4% வட்டி தொடரும்
5 ஆண்டுகளின் தபால் அலுவலகம்: முதலீட்டாளர்களுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கும்
தபால் அலுவலக கால வைப்பு: 1-3 ஆண்டுகளுக்கு 5.5% வட்டி விகிதம், 
5 ஆண்டு தபால் அலுவலக கால வைப்புக்கு 6.7 சதவீதம் வட்டி.
5 ஆண்டு நிலையான வைப்புத்தொகையின் (எஃப்.டி) கீழ் செய்யப்பட்ட அஞ்சல் அலுவலக முதலீடு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும். 


தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்பது வங்கியில் உள்ள மற்ற சேமிப்புக் கணக்கு போன்றது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த கணக்கு தபால் நிலையத்தில் உள்ளது. தபால் அலுவலகத்தில் மட்டுமே இந்த கணக்கை திறக்க முடியும். ஆனால் ஒரு கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்ற முடியும். இது மட்டுமல்லாமல், நீங்கள் மைனர் (post office savings scheme for child) ஒருவரின் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம்.


ALSO READ | அஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா?


ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் (Saving Schemes) சிறந்த விஷயம் என்னவென்றால், அதில் எந்த டி.டி.எஸ்ஸும் கழிக்கப்படுவது இல்லை. பல சேமிப்புத் திட்டங்களும் தபால் நிலையத்தில் முதலீடு செய்வதற்கு அதிக வட்டி பெறுகின்றன. கூடுதலாக, இது அரசாங்கத்தின் இறையாண்மை உத்தரவாதத்தை வழங்குகிறது. அஞ்சல் அலுவலக வரியின் பயன் பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.