மத்திய அரசின் ஆதரவுடன் இயக்கப்படும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமான ஆதாரத்தை வழங்குகிறது. SCSS என்பது மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஏற்ற முதலீடுகளில் ஒன்றாகும். ஏனெனில் இது பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது. 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் சந்தாதாரர்களுக்கு உத்தரவாதமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளுடன், சிறந்த முதலீட்டு திட்டமாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் பலனை பெற விரும்புவோர் தபால் அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலமாக முதலீடு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்


1. நிலையான வட்டி விகிதம்: வட்டி விகிதம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. முதலீட்டு காலம் முழுவதும் வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். சந்தை ஏற்ற இறக்கங்களால் வட்டி விகிதம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. SCSSக்கான வட்டி விகிதம் தற்போது 8.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


2. வைப்புத்தொகை: இதில் ரூ.1,000 மடங்குகளில் பணத்தைப் போடலாம். முதலீடு (Investment Tips) செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.30 லட்சம்.


3. முதிர்வு காலம்: திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். கணக்கு முதிர்ச்சி அடைந்த ஒரு வருடத்திற்குள், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.


4. முதிர்வு காலத்திற்கு முன்பாக பணத்தை திரும்பப் பெறுதல்: தேவைப்பட்டால், கணக்கைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் SCSS இலிருந்து முன்கூட்டியே திரும்பப் பெறலாம்.


6. வரிச் சலுகை: SCSS வைப்புத்தொகைகள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற தகுதிபெறும்.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான தகுதி


1. 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய எவரும் SCSS கணக்கைத் திறக்க தகுதியுடையவர்கள்.


2. 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான திட்டமாகும். 58 வயதில் ஓய்வு பெற்றவர்களும், 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் (VRS) இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். 


3. சந்தாதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.


4. ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்களும் SCSS கணக்கைத் திறக்கத் தகுதியுடையவர்கள். எனினும் இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.


மேலும் படிக்க | EPFO:3.0 மீண்டும் ஒரு சிறப்பு அம்சம் வெளியீடு: PF ஓய்வூதியம் (அ) EDLIதிட்டம் பற்றி அறிய உதவி எண் அறிவிப்பு !


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம்


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் 8.20 சதவீதமாக உள்ளது. நிலையான வைப்புத்தொகை (FD முதலீடுகள்) போன்ற மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது SCSS முதலீட்டின் மீதான வருமானம் அதிகமாக உள்ளது. வட்டித் தொகையானது காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும்.


மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் முறை


கணக்கைத் திறப்பதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க, அஞ்சல் அலுவலகம் அல்லது SCSS வழங்கும் அருகிலுள்ள வங்கிக் கிளைக்கு சென்றூ கணக்கை திறக்கலாம்


1. வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று SCSS விண்ணப்பப் படிவத்தைக் கேட்கவும்.


2. பெயர், முகவரி, வயது, வேலை மற்றும் ஓய்வூதிய விவரங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.


3. விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களைச் சேர்க்கவும்.


4. வங்கி ஊழியர்களிடம் டெபாசிட் செய்ய வேண்டிய பணத்துடன் விண்ணப்பத்தை ஒப்படைக்கவும்.


மேலும் படிக்க | வருமான வரி சேமிப்பு டிபஸ்... இந்த அலவன்சுகளுக்கு வரி கிடையாது.. நோட் பண்ணுங்க மக்களே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ