Post Office Time Deposit: நமது வருமானத்தின் குறிப்பிட்ட அளவை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ, பழகிக்கொண்டால் எதிர்காலத்தில் பெரும் நிதி சிக்கல் என்றும் எதுவும் வராது. அந்த வகையில், தபால் அலுவலகத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பைக் கொடுக்கும். 
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம். ஐந்தாண்டு கால அஞ்சலக எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன், ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரிச் சலுகைகளைப் பெறுவது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஞ்சலக எஃப்டி வட்டி விகிதங்கள் 


சந்தையுடன் இணைக்கப்பட்ட அல்லது சந்தை அல்லாத திட்டத்தில் முதலீடு (Investment Tips) செய்யும் போது, நாம் முதலீடு செய்யும் தொகையை பாதுகாப்பாக திரும்பப் பெற முடியுமா என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். பல முதலீட்டாளர்கள் ஆபாயம் இல்லாத பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவே காரணம், அவர்கள் உத்தரவாதமான வருவாயைப் பெறலாம். சந்தை அபாயமும் இல்லை. போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் திட்டம் (Post Office Time Deposit Account ) அல்லது போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி என்பது அத்தகைய முதலீட்டுத் திட்டமாகும். இதில் கிடைக்கும் வட்டி விகிதங்கள் 6.9% (1 ஆண்டு FD முதலீடு), 7.0% (2 ஆண்டு FD முதலீடு), 7.1% (3 ஆண்டு FD முதலீடு) மற்றும் 7.5% (5 ஆண்டு FD முதலீடு) என்ற அளவில் இருக்கும்.


முதலீட்டை இரட்டிப்பாக்குவது எப்படி


அஞ்சலக FD முதலீடுகள் நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் அதே வேளையில், உங்கள் தொகையை இரட்டிப்பாக்கலாம். அதற்கு நீங்கள் ஐந்து வருடத்திற்கு FD முதலீடு செய்து மேலும் ஐந்து வருடங்கள் நீட்டிக்க வேண்டும். நீட்டிப்புக்கான FD விதிகள் என்ன என்பதையும், அஞ்சலக திட்டத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்குவது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?


FD முதலீட்டை நீட்டிப்பதற்கான விதிகள்


1. அஞ்சலக நேர வைப்பு கணக்கு முதிர்வு தேதியிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் நீட்டிக்கப்படலாம்.


2. முதிர்வு தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஒரு வருட FD நீட்டிக்கப்படலாம், முதிர்வு காலத்தின் 12 மாதங்களுக்குள் இரண்டு வருட FD, மற்றும் 3- மற்றும் 5 வருட FDகள் முதிர்வு காலத்தின் 18 மாதங்களுக்குள் நீட்டிக்கப்படலாம்.


3. கணக்கைத் திறக்கும் போது FD விரிவாக்க வசதியும் உள்ளது, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது அஞ்சல் அலுவலகத்திற்கு இது குறித்து தெரிவிக்கலாம்.


4. முதிர்வு தேதியில் எஃப்டி கணக்கிற்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட காலப்பகுதிக்கு பொருந்தும்.


ரூ. 5 லட்சத்தை ரூ.10 லட்சம் ஆக்குவது எப்படி?


நீங்கள் 5 வருட போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்தால், உங்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.


தபால் அலுவலக திட்டத்தில் ரூ. 5,00,000 முதலீட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 2,24,974 வட்டி கிடைக்கும். மேலும் உங்கள் முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும்.


இந்தக் கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், அந்தக் காலக்கட்டத்தில் உங்கள் வட்டி ரூ.5,51,175 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.10,51,175 ஆகவும் இருக்கும்.


எனவே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் முதலீட்டை விட உங்கள் வருமானம் அதிகமாக இருக்கும்.


5 வருட அஞ்சலக FD  முதலீட்டில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான் முதலீடுகளுக்கு கிடைக்கும் வருமான விபரம்:


 



 


மேலும் படிக்க | Indian Railways: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இனி 20 ரூபாயில் உணவு கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ