PMJJBY காப்பீட்டு திட்டம்... 40 ரூபாயில் ரூ.2 லட்சத்திற்கான காப்பீடு பெறலாம்
மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க மத்திய அரசு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் பலன் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா: மத்திய அரசு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி கடந்த 015ஆம் ஆண்டு ஏழை-எளிய மக்களுக்கு காப்பீடு கி்டைக்கும் வகையில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) என்ற திட்டத்தை அறிமுகம் படுத்தினார். அதன்படி இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நிதிப் பாதுகாப்பை பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், பாலிசிதாரர் மரணம் அடைந்தால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். எனவே இப்போது இந்த திட்டத்தின் பலன் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
இது டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும் :
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana - PMJJBY) என்பது ஒரு காலக் காப்பீட்டுத் திட்டமாகும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து மரணம் அல்லது மொத்த நிரந்தர ஊனத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகையையும் மற்றும் நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ. 1 லட்சத்தையும் வழங்குகிறது. குறைவான பிரிமீயம் மட்டுமே செலுத்தி அதிக பலன்களை பெறுவது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
ரூ.436 பிரீமியம் செலுத்த வேண்டும் :
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana - PMJJBY) திட்டத்தின் பலனைப் பெற, நீங்கள் ஆண்டு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.40க்கும் குறைவாக ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் இதை புதுப்பிக்க வேண்டும். இந்த பாலிசியை வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தில் பெறலாம். இந்த காப்பீடு பெறுவதற்கு எந்த வித மருத்துவ பரிசோதனையும் செய்ய வேண்டியதில்லை.
இத்திட்டம் பிரதமரின் ஜன் தன் திட்டதுடன் இணைக்கப்படும். ஆரம்பத்தில் பெரும்பாலான ஜன் தன் வங்கிக் கணக்குகள் பணம் எதுவும் கணக்கில் வரவு வைக்கப்படாத கணக்குகளாக இருந்தன. இத்தகைய திட்டங்களை இணைப்பதன் மூலம் பூச்சியம் நிதி உள்ள கணக்குகளைக் குறைக்க அரசு இலக்கு வைத்துள்ளது. வங்கிக் கணக்குள்ள எவரும் இணைய வங்கிச் சேவையின் மூலம் அல்லது வங்கிக் கிளைக்கு நேரில் சென்று ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் வருடத்தின் எந்த காலத்திலும் இத்திட்டத்தில் சேரலாம்.
ஆட்டோ ரின்யூவல் வசதி :
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் ஆட்டோ ரின்யூவல் வசதியும் உள்ளது. அதாவது, காப்பீட்டு காலம் முடிந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான பிரீமியம் தானாகவே கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மே 25 முதல் மே 31க்குள் ரூ.436 கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும். பாலிசி எடுத்த 45 நாட்களுக்குப் பின்பு காப்பீட்டின் பலன் கிடைக்கும். எனினும் விபத்தில் இறந்துவிட்டால் 45 நாட்கள் என்ற நிபந்தனை செல்லுபடியாகாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ