புது தில்லி: உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்குப் பிறகு, எண்ணெய் வித்துக்களின் விலையில் கூர்மையான அதிகரிப்பு காரணமாக சமையல் எண்ணெயின் விலை இப்போது உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலேசியாவில் (Malaysia) பாமாயில் உற்பத்தி குறைந்து வருவதால் உள்நாட்டு ஃப்யூச்சர்ஸ் சந்தையில் கச்சா பாமாயில் (CPO) விலை கடந்த ஆறு மாதங்களில் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. சோயாபீன் மற்றும் கடுகு விலைகளும் சீராக உயர்ந்து வருகின்றன.


கடுகு, சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் (Palmoil) ஆகியவற்றின் விலை தற்போது இந்தியாவில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்றும் வெளிநாடுகளில் இருந்து விலையுயர்ந்த இறக்குமதியால் எதிர்வரும் நாட்களில் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் எண்ணெய் வித்து சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.


சந்தை மூலங்களின்படி, நாட்டில் கடுகின் மொத்த விலை வியாழக்கிழமை 10 கிலோவுக்கு ரூ .1,155 ஆகவும், சோயா எண்ணெயின் மொத்த விலை 10 கிலோவுக்கு ரூ .995-1010 ஆகவும், பாமாயில் (ஆர்.பி.டி) ரூ. 10 கிலோவுக்கு 935-945 என்ற அளவிலும் இருந்தன.


அதே நேரத்தில், சூரியகாந்தி எண்ணெயின் மொத்த விலை 10 கிலோவுக்கு 1,180-1,220 ரூபாய்.


வியாழக்கிழமை, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) கச்சா பாமாயிலின் விலை கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து 10 கிலோவுக்கு 869.70 ரூபாயாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் கச்சா பாமாயிலின் விலை 53-க்கும் மேல் உயர்ந்துள்ளன.


ALSO READ: இந்தியாவை தவிர இந்த நாடுகளில் மிகவும் மலிவான விலையில் விற்கப்படுகிறது உருளைக்கிழங்கு-வெங்காயம்


மலேசியாவில் பாமாயில் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கெடியா அட்வைசரி இயக்குனர் அஜய் கெடியா தெரிவித்தார். கச்சா பாமாயிலுடன் நாட்டில் கடுகு மற்றும் சோயாபீனின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் சமையல் எண்ணெயின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.


மறுபுறம், சோயாபீன் மற்றும் சோயா எண்ணெய் விலைகளும் உலக சந்தையில் உயர்ந்துள்ளன.


பாமாயில் மற்றும் சோயா எண்ணெய் உள்ளிட்ட பிற சமையல் எண்ணெய்களின் விலை உயர்வு கடுகு எண்ணெயையும் பாதித்துள்ளது. அதே நேரத்தில் கடுகு பயிர் வளர்ச்சி கடந்த பருவத்தில் குறைவாகவே இருந்தது என்று எண்ணெய் தொழில் மற்றும் வர்த்தக மத்திய அமைப்பின் தலைவர் லட்சுமிச்சந்த் அகர்வால் தெரிவித்தார்.


விலைகளுக்கு ஆதரவு கிடைத்துள்ளது. விலை அதிகரிப்பு, நடப்பு ராபி பருவத்தில் கடுகு விதைப்பதில் விவசாயிகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.


வியாழக்கிழமை, நாட்டின் விவசாய பொருட்களுக்கான மிகப்பெரிய ஃப்யீச்சர்ஸ் சந்தையான தேசிய பொருட்கள் மற்றும் டெரிவேடின்ஸ் பரிமாற்றத்தில் (NCDX) கடுகு நவம்பர் ஒப்பந்த விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .6,348 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், NCDX-ல் நவம்பர் சோயாபீனின் ஒப்பந்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .4,339 உயர்ந்தது.


ALSO READ:உருளைக்கிழங்கு விலை கிடுகிடுவென உயர்வு.. தவிக்கும் நடுத்தர மக்கள்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR