இந்தப் பயிர்களை வளர்த்தால் கோடீஸ்வரராகலாம்! அதிக வருமானம் கொடுக்கும் தோட்டப்பயிர்கள்
Most Profitable Plants: இந்தியாவில் வளரக்கூடிய லாபகரமான தாவரங்களை வளர்க்க தோட்டக்கலை திறன் மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் போதும்.
பொழுதுபோக்கிற்காக தோட்டம் வளர்ப்பது ஒரு சிலரின் விருப்பம் என்றால், விவசாய நாடான இந்தியாவில் பலரின் உயிர்நாடியே வேளாண்மை தான். தோட்டம் ஒரு இலாபகரமான தொழில் ஆகும். ஆனால், தோட்டப்பயிர் என்றால், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வேறு பச்சைக் காய்கறிகளைப் பற்றி நினைவுக்கு வரும். வீட்டுக் காய்கறித் தோட்டங்களில் எளிதில் காண முடியாத ஆனால்அதிக லாபம் தரும் தாவரங்கள் பல உள்ளன. அவற்றை இடவசதி இருந்தால் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். இந்தியாவில் தோட்டக்கலையை வளர்ப்பதற்கும், லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றுவதற்கும் தாவரங்கள் இவை...
மலர்கள்
மலர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு விரும்பப்படுகின்றன. பூக்களை வளர்ப்பது வணிக உரிமையாளராக முடிவற்ற வாய்ப்புகளையும் பணத்தையும் தரலாம். பூச்செடிகள், பூங்கொத்துகள், காய்ந்த பூக்கள், மாலைகள், பறித்த பூக்கள் அல்லது பூக்களை வேறு எந்த வடிவத்திலும் விற்கலாம். இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு, உங்களுக்கு தோட்டக்கலை பொருட்கள் மற்றும் விதைகள் தேவைப்படும். வார இறுதி மலர் சந்தைகளில் ரோஜா, செம்பருத்தி, மல்லிகை, சாமந்தி போன்ற பிரபலமான பூக்களை வளர்த்து விற்கலாம்.
மூங்கில்
மூங்கில் செடிகள் நல்ல அதிர்ஷ்டம், செல்வம், நீண்ட ஆயுள் மற்றும் பிற நேர்மறையான எண்ணத்தை வளர்க்கக்கூடியது ஆகும். பல வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் இடங்களில் மூங்கில் செடிகளை பானையில் வைத்து, தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசளிக்க விரும்புகிறார்கள். உங்கள் வீட்டு முற்றத்தில் மூங்கில் செடிகளை வளர்ப்பது உங்கள் ஆர்வத்தை பணமாக மாற்றுவதற்கான எளிதான வழியாகும்.
மூலிகைகள்
மூலிகைகளுக்கு பல பயன்கள் உள்ளன. அவை சுவையை அதிகரிக்க ஒரு சமையல் மூலப்பொருளாக அல்லது காயங்கள் அல்லது இரண்டையும் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படலாம். பிரபலமான மூலிகைகளை வளர்ப்பது லாபம் ஈட்டுவதாக நிரூபிக்க முடியும். துளசி, ரோஸ்மேரி, வெங்காயம், கொத்தமல்லி என நறுமணம் மிக்க தாவரங்களை வளர்த்து இலாபம் ஈட்டலாம்.
காளான்கள்
காளான் என்பது நீங்கள் குறைந்த இடத்தில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும், குறைந்த முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெற காளான வளர்ப்பு சிறந்ததாகும். சிப்பி மற்றும் ஷிடேக் போன்ற அயல்நாட்டு காளான்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். இது நல்ல லாபம் தரும் தொழிலாகும். பாரம்பரிய விவசாயத்தில் இருந்து மாறுபட்ட இந்தத் தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
அலங்கார புற்கள்
வறட்சியை தாங்கும் அலங்கார புற்கள் வளர்ப்பதற்கு பராமரிப்பு ஓரளவு போதுமானது; பல வீட்டு உரிமையாளர்கள் மற்றும் இண்டீரியர் டெக்கரேட்டர்ஸ் அலங்கார புற்களை விரும்புகிறார்கள். அலங்கார புற்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. பின்னணியை உருவாக்க, சுவர் தோட்டங்கள் அல்லது வேறு எந்த வடிவத்திலும்அலங்கார புற்களை பயன்படுத்தலாம். தாய் செடியிலிருந்து நூற்றுக்கணக்கான அலங்கார புல் செடிகளை வளர்க்கலாம்.
மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் அதிரடி ஏற்றம், வந்தது கூடுதல் தொகை: இப்படி செக் பண்ணுங்க
ஜின்ஸெங்
ஜின்ஸெங் ஒரு குணப்படுத்தும் மூலிகை, ஜின்ஸெங் வளர சுமார் ஆறு வருடங்கள் தேவைப்பட்டாலும், நீங்கள் ரூட்லெட்டுகள் மற்றும் விதைகளை வருமானத்திற்காக விற்கலாம். ஜின்ஸெங் வளர இந்தியாவில் சாதகமான சூழல் நிலவுகிறது. இது முதிர்ச்சியடைவதற்கும் செழித்து வளர்வதற்கும் குளிர்காலம் உகந்தது.
மருத்துவ தாவரங்கள்
மருத்துவ தாவரங்களை வளர்ப்பதன் மூலம் வணிக ரீதியாக லாபம் ஈட்டலாம். நீங்கள் வளர்க்க உத்தேசித்துள்ள செடியின் மருத்துவ குணங்கள் குறித்து உங்களுக்கு போதுமான அறிவு இருக்க வேண்டும். அலோ வேரா ஒரு பிரபலமான மற்றும் குறைந்த பராமரிப்பு மருத்துவ தாவரமாகும், இது உங்களுக்கு சிறந்த பண பலன்களைத் தரும்.
இந்தியாவில் வளரக்கூடிய லாபகரமான தாவரங்களை வளர்க்க தோட்டக்கலை திறன் மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் போதும். இந்த ஏழு செடிகள் உங்களுக்கு அபாரமான வருமானத்தை தரும்.
மேலும் படிக்க | சுகர் நோயாளிகள் கவனத்திற்கு..இந்த தவறுகளை ஒரு போதும் செய்ய வேண்டாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ