Business Ideas For Women : கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை பொறுத்தவரை தொழில் முனைவோர்களின் விகிதம் அதிகமாகி விட்டது. டிஜிட்டல் துறையின் வளர்ச்சியாலும், மக்களின் மாறிக்கொண்டே வரும் விருப்பங்களாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காண்பது மட்டுமன்றி, தனி நபரின் வருமானமும் பெருகுகிறது. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் கூட, தங்களுக்கு தெரிய கைத்தொழிலை வைத்து, அதை மெருகேற்றி தங்கள் வீட்டில் சம்பாதிப்பவரை விட அதிகம் சம்பாதித்து வருகின்றனர். அப்படி, பெண்களுக்கான தொழில் முன்னேற்ற ஐடியாக்களை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டேட்டா எண்ட்ரி வேலை:


அனைவராலும் பார்க்கக்கூடிய ஒரு வேலைதான், டேட்டா எண்ட்ரி வேலை. இதற்கு அடிப்படை படிப்பறிவும் கற்றுக்கொள்ளும் திறனும் இருந்தாலே போதும். மிகக்குறைந்து முதலீட்டிலேயே இந்த வேலையை செய்யலாம் என இதில் வேலை செய்பவர்கள் கூறுகின்றனர். வீட்டில் கணினி, தடையில்லா இணைய சேவை ஆகியவை இருந்தாலே இந்த வேலையை தங்கு தடையின்றி செய்யலாம். இறுப்பினும் இந்த வேலையின் பெயரில் சில ஏமாற்று வேலைகளும் நடைபெறுகின்றன. அதை கண்டறிந்து பார்த்து இந்த தொழிலை செய்ய வேண்டும். 


ப்ளாக் எழுதலாம்:


எழுதுவதிலும், அதை திறமையாக பிறரை படிக்க வைப்பதிலும் ஆர்வமுடையவராக இருந்தால் கண்டிப்பாக ப்ளாக் எழுத ஆரம்பிக்கலாம். கிரியேட்டிவ் காபி ரைட்டிங், கண்டண்ட் எழுதுவது, கோஸ்ட் ரைட்டிங் உள்ளிட்ட விதவிதமான ரைட்டிங்கை வைத்து நீங்கள் ஃப்ரீலான்சிங் முறையில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். இதற்காக பல நிறுவனங்கள் ஆன்லைனில் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களின் வேலைக்கு ஏற்ப வழங்குகின்றன. 


யூடியூப் கிரியேட்டர்:


யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு பணம் சம்பாதிப்பது புதிய மற்றும் ட்ரெண்டிங்கான வழியாகும். குடும்ப தலைவிகள் பலர் தங்களுக்கு எந்த திறனில் ஆர்வம் அதிகமோ, அந்த திறனை மேம்படுத்திக்கொண்டு வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். உதாரணத்திற்கு, ஒருவருக்கு சமையல் மிகவும் பிடித்திருக்கிறது என்றால், சில புதுமையான ரெசிப்பிகளை செய்து அதை எடிட் செய்து யூடியூபில் பதிவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு கூகுள், விளம்பரங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையையும் வழங்குகிறது. 


மேலும் படிக்க | குறைந்த செலவில் கோவா டூர் போகலாம்.. ஐஆர்சிடிசி அசத்தல் டூர் பேக்கேஜ்


மொழிப்பெயர்ப்பு தொழில்:


உங்களுக்கு, ஒன்றுக்கும் அதிகமான மொழி தெரிந்தவராக இருந்தால் கண்டிப்பாக மொழிப்பெயர்ப்பாளராக இருக்கலாம். இந்தியாவில் அதிகமாக் அபேசப்படும் மொழிகளுள் ஒன்று, இந்தி. இது தெரிந்திருந்தால், ஒரு சில நிறுவனங்கள் உங்களை ஈசியாக ஃப்ரீலான்ஸராக எடுத்துக்கொள்வர். கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மொழிப்பெயர்பாளர்களை ஹையர் செய்கின்றன. 


கைவினை பொருட்களில் கைதேர்ந்தவர்:


பலருக்கு கைவினை பொருட்களை செய்து பழகவும் அதை காட்சி பொருளாக வைக்கவும் பலருக்கு ஆர்வம் இருக்கும். எம்ராய்டரி, மன்பாண்டங்களில் பெயிண்டிங், முரல் ஆர்ட், ஆரி வர்க் செய்த ப்ளவுஸ் என கைவினை பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பல பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது ஆரம்ப காலத்தில் வருமானத்தை குறைவாக கொடுத்தாலும், முழு முயற்சிக்கு பிறகு கண்டிப்பாக நிலையான வருமானம் கிடைக்கும்.


மேலும் படிக்க | PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ