PF பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரைவில் வாய்ப்பு!
வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் தங்கள் முழு PF பணத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் தங்கள் முழு PF பணத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
இது தவிர, ஊழியர்கள் ஒரு புதிய வேலையில் சேரும்போது அவர்கள் EPF திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறீர்களா அல்லது NPS திட்டத்தை தேர்வு செய்கிறார்களா என்பது குறித்து தெரிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் இந்த யோசனை தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர் என்றும், இது தொடர்பாக விரைவில் ஒரு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதாக ஜீ மீடியாவிடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
NPS என்பது ஜனவரி 1, 2004 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். ஜனவரி 1, 2004-க்குப் பிறகு சேவையில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் NPS கட்டாயமாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் தனியார் நிறுவனங்களால் 2009-ல் ஊழியர்களுக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார், செப்டம்பர் 17-ம் தேதி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) 6.5 கோடி உறுப்பினர்கள் 2018-19 நிதியாண்டுக்கான வைப்புத்தொகைக்கு 8.65% வட்டி பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது, 2017-18 ஆம் ஆண்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 8.55% வட்டி விகிதத்தில் PF திரும்பப் பெறும் உரிமைகோரல்களை செப்டம்பர் 17-ம் தேதி, EPFO தீர்த்து வைக்கிறது.
EPFO இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு பிப்ரவரி மாதம் கடந்த நிதியாண்டில் 8.65% வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் EPFO-க்கு 8.65% வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
எனினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான 8.55% வட்டி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என்பதைக் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2016-17 ஆம் ஆண்டில், வட்டி விகிதம் 8.65% ஆகவும், 2015-16ல் 8.8% ஆகவும் இருந்தது. 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் EPFO 8.75% வட்டியை வழங்கியுள்ளது, 2012-13 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.