பிரபலமான மொபைல் கேம் PUBG மொபைல் மீதான சமீபத்திய தடையினால், அந்த விளையாட்டின் டெவலப்பர் Tencent நிறுவனத்திற்கு பயங்கர அடி கிடைத்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மதிப்பு,  34 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது, அதாவது சுமார் 2.5 லட்சம் கோடியை இழந்துள்ளது. இந்தியாவில் பப்ஜி உட்பட 118 சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டன. PUBG மொபைலைத் தவிர, அரினா ஆஃப் வேலர், செஸ் ரன் மற்றும் லுடோ வேர்ல்ட் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன, இவை அனைத்தும் டென்செண்டுடன் தொடர்புடைய செயலியாகும். அவை நிறுவனத்தின் சந்தை மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தகவல் அறிக்கை ஒன்றூ கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PUBG மொபைல் இந்தியாவில் மிக பெரிய அளவில் இலாபம் ஈட்டு வந்தது. இதன் தினசரி  பயனர்களின் எண்ணிக்கை 30 மில்லியன் அதாவது 3 கோடிக்கும் அதிகாமாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள மொத்த பயனர்களின் எண்ணிக்கையில் கொண்ட நாடுகளின் இந்தியா முக்கிய நாடாகும், இந்தியா டென்செண்ட் நிறுவனத்தின் மிக முக்கிய சந்தையாக திகழ்கிறது. தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து, டென்செண்டின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. அதே போன்று தேசிய பாதுகாப்பு அடிப்படையில் அமெரிக்கா, கடந்த மாதம் இந்த நிறுவனத்தின் WeChat செயலியை தடைசெய்ததை அடுத்து, சமீபத்தில் டென்சென்ட் இதே போன்று மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டது.


கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து PUBG மொபைல் அகற்றப்பட்டது.  மேலும் முழுமையாக விளையாட்டை ப்ளாக் செய்ய ஏற்கனவே டவுன்லோடு செய்திருப்பவர்களும் இனி விளைடாட இயலாது. PUBG மொபைல் விளையாட்டினால், மாணவர்கள் அதற்கு அடிமையாகி, படிப்பு முகவும் பாதிப்பட்டதால், சில நகரங்களில் முன்னதாகவே தடை செய்யப்பட்டது.


சில மாணவர்கள் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி மனது பாதிக்கப்பட்டு, இதில் தோற்றதால், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூட நடந்துள்ளது.


சில மாணவர்களின் உடல் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது.


ALSO READ | மருத்துவமனையில் மலர்ந்த காதல் நோய்.... 70 வயது வாலிபரை ஈர்த்த 55 வயது மங்கை..!!!