Gold Silver Prices: தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தொடர்ந்து அதிகரிப்பு காணப்படுகிறது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலையின் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக தங்கம், பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சரியான மாற்றாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கின்றனர். இந்தியாவில் தங்கத்தின் விலை 22 காரட் கிராமுக்கு ₹ 5,495 ஆகவும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ₹ 5,995 ஆகவும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் 24 காரட், 22 காரட், 18 காரட், 10 காரட் போன்ற பல்வேறு காரட் தங்கம் இந்தியாவில் கிடைக்கிறது. 24 காரட் தங்கம் சுத்தத்தங்கம், அதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.. 22 காரட் தங்கம் தான் ஆபரணங்கள் செய்ய பயன்படும் அதிகபட்ச காரட் ஆகும்.


 24 காரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையானது. 22 காரட் தங்கம் 91.67 சதவீதம் தூய்மையானது. 24 காரட் தங்கம் பொதுவாக மிகவும் பிரகாசமானதாக இருக்கும் என்றால், 22 காரட் தங்கம் சற்று குறைவான பளபளப்புக் கொண்டது. 24 காரட் தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம், தூய்மை தான் காரணம்.


24 காரட்கள் முதன்மையாக மின் மற்றும் மருத்துவ சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. 22 காரட் தங்கம் நகைகள் மற்றும் நாணயங்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | விஜய் மல்லையாவிடம் நிறுவனத்தை வாங்கி வேற லெவலில் வெற்றி கண்ட அபூர்வ சகோதரர்கள்!!


பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று மிச்செல் போமன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதன் பிறகு, உலக சந்தையில் தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளன. தங்கத்தின் விலையை வீட்டில் இருந்தபடியே தெரிந்துக் கொள்ளலாம். இந்திய புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் படி, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து விலையை தெரிந்துக் கொள்ளலாம்.


நீங்கள் எந்த எண்ணில் இருந்து மெசேஜ் செய்தீர்களோ அதே எண்ணில் உங்கள் செய்தி வரும். நீங்களும் சந்தையில் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால், ஹால்மார்க் குறியீடு இருப்பதை உறுதி செய்த பிறகே தங்கத்தை வாங்குங்கள். தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க அரசு செயலியையும் பயன்படுத்தலாம். 'பிஐஎஸ் கேர் ஆப்' மூலம் தங்கம் உண்மையானதா அல்லது போலியா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். இது தவிர, இந்த ஆப் மூலமாகவும் புகார் செய்யலாம்.


மேலும் படிக்க | நடுத்தர மக்களுக்கு CLSS திட்டத்தில் வட்டி மானியம் எவ்வளவு? விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ