கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அவதிப்படும் மக்கள்! அதிர்ச்சி புகார் உண்மையா?
Ration Card Printing Stopped: பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் மகிழ்ச்சி என்றால், மற்றவர்களுக்கு?
Kalaignar Magalir Urimmai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், அது தமிழக அரசு அதிகாரிகளுக்கு பணிச்சுமையை அதிகப்படுத்தியிருப்பதுடன், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்களை பரிசீலிப்பது மற்றும் குடும்ப அட்டை (Ration card) அச்சிடும் பணியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால், தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது..
மகளிர் உரிமைத் தொகையாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 (ஆயிரம் ரூபாய்) பணம்வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Thittam) என்று அறியப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி அதிகமான பெண்கள் இந்த உரிமைத் தொகையை பெற்றுவருகின்றனர். பல பெண்கள், தங்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்பெறும் தகுதிகள் இருந்தாலும், திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று புகார் சொன்னதை அடுத்து, மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியது.
இந்த திட்டத்தின் கீழ், கடந்த மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த மாதம் 15ம் தேதி வங்கிகள் விடுமுறை என்பதால், அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை (October Installement) ஆயிரம் ரூபாய், ஒரு நாள் முன்னதாகவே அதாவது 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது. அத்துடன் இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
குடும்ப அட்டைத் திட்டம் என்பது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பதிவு செய்து வைத்திருப்பதற்காகப் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஒரு திட்டமாகும். நம் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் குடும்ப அட்டை (Ration card) வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் - மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995 அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி வழங்கல் விநியோகம் போன்றவற்றை நியாயமான முறையில் வழங்கிட மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.
குடும்ப அட்டைகளை பயன்படுத்தி, மக்கள் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் ரேஷன் அட்டைகள் வேறுபடுத்தப்படுகின்றன
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த பலர் குடும்ப அட்டை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தால், புதிதாக குடும்ப அட்டைகள் கேட்டு பலரும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளதாகவும், உரிய தகுதி வாய்ந்த விண்ணப் பதாரர்களுக்கு, 4 மாதங்களாகியும் குடும்ப அட்டை கிடைக்கவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்த புகார்கள் அனைத்தையும் அரசு விரைவில் தீர்த்துவிடும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க கடைசி நாள் நாளையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
s