2000 ரூபாய் நோட்டு:  இந்தியாவில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து ரூபாய் நோட்டுகள் குறித்து பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் படி சந்தையில் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சந்தையில் புதிய ரூ.2000 நோட்டுகள் வெளியானது. அது தற்போது மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் செப் 30 வரை மட்டுமே செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. மேலும் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதனை திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் முடிவுக்குப் பிறகு, தற்போது வரை மொத்தம் ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | இப்படியான 5 ரூபாய் உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்க.. லட்சங்களை அள்ளித்தரும்


கடந்த மே மாதம் இந்த உயர்மதிப்பு நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) அறிவித்து இருந்தது. மேலும் செப்டம்பர் 30க்குள், இந்த நோட்டை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது உங்கள் கணக்கில் டெபாசிட் செய்துக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது.


அந்த வகையில் இதுவரை 88 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும், 42 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி பொது சுழற்சியில் ரூ.3.62 லட்சம் கோடியாக இருந்த ரூ.2,000 நோட்டுகள், மே 19 ஆம் தேதி ரூ.3.56 லட்சம் கோடியாக குறைந்தன. மேலும் திரும்பப் பெறப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 87 சதவீதம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டவை என்றும், 13 சதவீதம் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.


இதயனிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிப்புக்கு முன், புழக்கத்தில் உள்ள உயர் மதிப்புள்ள நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்ய ரிசர்வ் வங்கி விருப்பம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பே 2000 ரூபாய் (2000 Rupees Note) நோட்டுகள் அச்சடிப்பது ரிசர்வ் வங்கியால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நீங்களும் இதை செய்ய வேண்டும்
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்திவருகிறார்கள் அல்லது ரூ.500, ரூ.100 நோட்டுகளாக மாற்றிப் பெறுகிறார்கள். மேலும் மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | இரண்டு வங்கிகளில் கணக்கு உள்ளதா? இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ