கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளித்த ரிசர்வ் வங்கி: கடன் சுமையை குறைக்க புதிய விதி
RBI Update: ரிசர்வ் வங்கியின் சில விதிகளின் மூலம், நீங்கள், கடனை திருப்பி செலுத்தாதவர், அதாவது டீஃபல்டர் ஆவதை தடுக்கலாம். மேலும் இவற்றின் உதவியுடன் கடன் வட்டி மற்றும் இஎம்ஐ (EMI) தொகையும் குறைக்கலாம்.
RBI Update: மனிதர்களுக்கு வாழ்க்கையில் பல வித செலவுகள் இருக்கின்றன. சில நமக்கு தெரிந்த, நாம் திட்டமிடும் செலவுகள். சில நாம் எதிர்பாராமல் நம்மை தாக்கும் செலவுகள். நமக்கு பணத்தேவை ஏற்படும்போது பல சமயங்களில் நம் கைகளில் தேவையான அளவு தொகை நம்மிடம் இருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில் நாம் கடன் பெறுகிறோம்.
தேவையான தொகையை பொறுத்து நாம் கடன் பெறும் இடமும் மாறுகின்றது. வங்கிகள் மற்றும் முறையான கடன் நிறுவனங்களில் கடன் பெறுவது எப்போதும் சரியான வழியாக பார்க்கப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்கி தங்கள் பணிகளை முடிப்பவர்கள் ஏராளம். வீடு வாங்க, வாகனம் வாங்க, குழதைகளின் கல்வி, திருமணம் என பல்வேறு தேவைகளுக்கு நாம் வீட்டு கடன், கார் கடன், கல்வி கடன், தனிநபர் கடன் என வங்கிகளில் இருந்து பல்வேறு கடன்களை வாங்குகிறோம்.
தங்கள் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருப்பார்கள் ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) சில விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ரிசர்வ் வங்கியின் சில விதிகளின் மூலம், நீங்கள், கடனை திருப்பி செலுத்தாதவர், அதாவது டீஃபல்டர் ஆவதை தடுக்கலாம். மேலும் இவற்றின் உதவியுடன் கடன் வட்டி மற்றும் இஎம்ஐ (EMI) தொகையும் குறைக்கலாம். இந்த விதிகள் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய வகையில் நிவாரணம் அளிக்கக்கூடியவையாகும்.
மக்களின் கடன் அல்லது கிரெடிட் கார்டு செலவுகளை சிபில் CIBIL கண்காணிக்கும். கடந்த ஓராண்டில் வெளியான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் பழக்கம் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, தனிநபர் கடன்களும் கோவிட் நோய்தொற்றுக்குப் பிறகு முன்பை விட அதிகரித்து வருகின்றன. இந்த அறிக்கை இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.
ரிசர்வ் வங்கி விதிகளின் மூலம் நிவாரணம் கிடைக்கும்
கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI) சில விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் கீழ், கடனைத் திருப்பிச் செலுத்த அதிக கால அவகாசம் கொடுக்கப்படுவதால், கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்த முடியாதவர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக உள்ளது.
மேலும் படிக்க | பிபிஎஃப்பில் முதலீடு செய்தே கோடீஸ்வரர் ஆகலாம்! அதற்கு இப்படி முதலீடு செய்யவும்
உதாரணமாக, ஒரு நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி அவர் அதை மறுசீரமைக்கலாம். அதாவது, முழு தொகையை கட்ட முடியாத சூழ்நிலையில், அவர் முதலில் ரூ. 5 லட்சத்தை மட்டும் செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ. 5 லட்சத்தை நீங்கள் நீண்ட கால அவகாசத்தில் படிப்படியாக செலுத்தலாம். இந்த வழியில் கடன் வாங்கிய நபர் மீதான இஎம்ஐ அழுத்தம் குறைக்கப்படும்.
கடன் வாங்குபவர்களுக்கு கடன் மறுசீரமைப்பு (Loan Restructuring) ஒரு சிறந்த வழியாக இருக்கும். இது, கடனை உரிய நேரத்தில் செலுத்தாத நபர்கள் மீதிருந்து டீஃபால்டர், அதாவது, கடனை திருப்பி செலுத்தாதவர் என்ற அடையாளத்தை அகற்றும். கடன் வாங்கிய ஒரு நபர் டீஃபால்டராக மாறினால், அவரது கடன் வரலாறு (Credit History) மோசமடைகிறது. இது மட்டுமின்றி இது அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாக, அவரது CIBIL ஸ்கோரும் கெட்டுவிடுகிறது. இதனால், எதிர்காலத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் போய் விடுகின்றது, அல்லது சிக்கலுக்கு உள்ளாகிறது. இந்த பிரச்சனைகள்ளுக்கு ரிசர்வ் வங்கியின் லோன் ரீஸ்ட்ரக்சரிங் விதி பெரிய நிவாரணம் அளிக்கின்றது.
மேலும் படிக்க | அஞ்சலக திட்டம்... வங்கி FD... PPF... இவற்றில் எது சிறந்த முதலீடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ