Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் UPI மூலம் கட்டணங்களை செலுத்தும் விதத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். ஆர்பிஐ -இன் (RBI) அந்த முக்கியமான அறிவிப்பை பற்றி இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UPI கட்டணச் சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். ஆனால் இப்போது NPCI ஒரு சிறப்புச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இதன்மூலம் வங்கிக் கணக்கு இல்லாதவர்களும், அல்லது டெபிட் கார்டு இல்லாதவர்களும் UPI மூலம் பணம் செலுத்த முடியும். NPCI இன் இந்த புதிய சேவை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


Delegated Payment System: புதிய திட்டத்தின் முக்கியத்துவம் என்ன? 


NPCI விரைவில் டெலிகேட்டட் பேமென்ட் முறையைத் (Delegated Payment System) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கணக்குதாரரின் சம்மதத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது யுபிஐ கணக்கைப் (UPI Account) பயன்படுத்த முடியும். இதன் மூலமாக தங்கள் பெயரில் டெபிட் கார்டு இல்லாத அல்லது வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப உறுப்பினர்களும் கணக்கு உள்ள நபரின் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியைப் பெற முடியும். எளிமையான வார்த்தைகளில் இதை விளக்க வேண்டுமானால், ஒரு வங்கிக் கணக்கு மூலம் பலர் யுபிஐ பரிவர்த்தனைகளை (UPI Transactions) செய்ய முடியும். மற்ற பயனர்களுக்கு UPI உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கான தேவை இருக்காது.


UPI -இன் டெலிகேட்டட் பேமென்ட் சிஸ்டம் எவ்வாறு செயல்படும்?


- UPI இல் 'Delegated Payments' -ஐப் பயன்படுத்த, சேமிப்புக் கணக்கு தேவைப்படும். 
- யாருடைய கணக்கிலிருந்து UPI பயன்படுத்தப்படுகிறதோ, அந்த நபர் முதன்மை அணுகலை, அதாவது மாஸ்டர் ஆக்சஸைப் பெறுவார்.
- அந்த நபர் விரும்பினால், பணம் செலுத்துவதற்காக வேறு ஒரு நபருக்கு கணக்கிற்கான அணுகலை வழங்க முடியும். 
- கிரெடிட் கார்டு அல்லது UPI கிரெடிட் லைன் வசதியில் இந்த சேவை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | EPS: பணி ஓய்வுக்கு பிறகு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? முழுமையான கணக்கீடு இதோ


பயனர்களுக்கு அறிவிப்பு வரும்


NPCI அதிகாரப்பூர்வமாக 'டெலிகேட்டட் பேமென்ட் சிஸ்டம்' -ஐ தொடங்கும் போது UPI ஆப்ஸின் பயனர்கள் அதற்கான அறிவிப்பைப் பெறக்கூடும். இந்த  அறிவிப்பின் போது, ​​உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து வேறு யாருக்காவது UPIஐ செட் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும். ஒரு முக்கிய UPI ஐடி மற்றும் சேமிப்புக் கணக்கிலிருந்து எத்தனை பேருக்கு 'டெலிகேட்டட் பேமெண்ட்ஸ்' வசதியைப் பெறலாம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆவணங்களை வெரிஃபை செய்ய வேண்டும்


'Delegated Payment' வசதியை தேர்ந்தெடுத்த பின்னர், இந்த சேவை யாருக்காக செட் செய்யப்பட்டு இருக்கிறதோ, அந்த நபரின் எண், ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் வெரிஃபிகேஷனுக்கான கேட்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் இருந்து உங்கள் குடும்பத்தினர் அல்லது தெரிந்தவர்கள், யாருக்காக செட் செய்யப்பட்டுள்ளதோ, அவர்கள் எவ்வளவு UPI செய்ய முடியும் என்பதற்கு வரம்பை அமைக்க முடியும்.


'டெலிகேட்டட் பேமென்ட்' மூலம் முதன்மை பயனர் யாரது பெயரை செட் செய்துள்ளாரோ, அவர் செகண்டரி அதாவது இரண்டாம் நிலைப் பயனர் என அழைக்கப்படுவார். அவர் செயலியை பதிவிறக்கிய பிறகு, அவரது எண் மற்றும் ஆதார் சரிபார்ப்பு செய்த பிறகு, முதன்மைப் பயனரின் பிரதான செயலியின் ஒப்புதலுக்குப் பிறகு UPIஐப் பயன்படுத்தலாம். 


'டெலிகேட்டட் பேமென்ட் சிஸ்டம்' அமலுக்கு வந்த பின்னர், UPI மூலம் செலுத்தப்படும் கட்டணங்கள் 25-30% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே அடிக்கடி பயன்படுத்தப்படும் கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கும், சொந்த வங்கிக் கணக்கு இல்லாத முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.


மேலும் படிக்க | செப்டம்பரில் டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ