UPI பயனர்களுக்கு RBI அளித்த தீபாவளி பரிசு: பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது
UPI Lite Update: தீபாவளிக்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பயனர்களுக்கு ஒரு பரிசை அளித்துள்ளது. யுபிஐ லைட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
UPI Lite Update: UPI பயனரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. யுபிஐ லைட் தொடர்பாக வந்துள்ள புதிய அப்டேட் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். தீபாவளிக்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) யுபிஐ பயனர்களுக்கு ஒரு பரிசை அளித்துள்ளது. யுபிஐ லைட் (UPI Lite) மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள புதிய விதியின்படி, ரிசர்வ் வங்கி பரிவர்த்தனை வரம்பை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதனுடன், மத்திய வங்கி UPI லைட் வாலட் வரம்பையும் 2000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ (RBI) யுபிஐ123பே (UPI 123PAY) பரிவர்த்தனைக்கான வரம்பு 5000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
RBI: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க எடுக்கபட்ட நடவடிக்கை
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 'தொடர்ச்சியான புது முயற்சிகள் மற்றும் அடாப்டேஷன் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் செய்து நாட்டின் நிதி நிலப்பரப்பை UPI மாற்றியுள்ளது. UPI -ஐ அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும், அதை மேலும் புதுமையானதாக மாற்றுவதற்காகவும் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. UPI123Pay இல் பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், UPI லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர பரிவர்த்தனை வரம்பு ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.' என்று கூறினார்.
UPI123: சேவை 12 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது
- UPI123 மார்ச் 2022 இல் தொடங்கப்பட்டது.
- பழைய போன்களை வைத்திருப்பவர்கள் UPIஐப் பயன்படுத்த உதவுவது இந்தச் சேவையின் நோக்கமாகும்.
- இப்போது இந்த சேவை 12 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது.
- இது பயனர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
- முதலாவதாக, UPI123Pay மூலம் பயனர்கள் ஒரு நேரத்தில் 5000 ரூபாய் வரை மட்டும்தான் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.
- எனினும், தற்போது இந்த வரம்பு ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் மக்கள் அதிக அளவில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
UPI Lite Wallet
இதுவரை, UPI லைட் வாலட் மூலம் ஒரே நேரத்தில் ரூ.500 மட்டுமே அனுப்ப முடியும் அல்லது பெற முடியும் என்ற நிலை இருந்தது. மொத்தமாக இதில் ரூ.2000 வரை மட்டுமே வைத்திருக்க முடியும். இப்போது UPI லைட்டின் பயன்பாட்டை அதிகரிக்க, அரசாங்கம் Wallet வரம்பை அதிகரித்துள்ளது. இதுவும் பயனர்களுக்கு நல்ல நிவாரணமாக வந்துள்ளது. இப்போது நீங்கள் ஒரு நேரத்தில் ரூ. 1000 வரை அனுப்பலாம் அல்லது பெறலாம். மேலும் மொத்தமாக வாலட்டில் ரூ.5000 வைத்திருக்கலாம்.
UPI லைட் தொடங்கப்பட்டபோது சில விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியது. இப்போது இந்த விதிகளும் மாற்றப்படும். பயனர்களின் கட்டண செலுத்தல்களை எளிதாக்க இவை செய்யப்படும். யுபிஐ, நாட்டு மக்களின் பண பரிமாற்றம் மற்றும் கட்டணங்களை செலுத்தும் வழிமுறைகளை மிகவும் எளிதாக்கி செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. அவ்வப்போது இதில் செய்யப்படும் புதிய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் பயனர்களின் வசதிகளை இன்னும் அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ