RBI Monetary Policy 2023: இந்தியாவின் முதன்மை வங்கியான ரிசர்வ வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை அறிவித்தார். பிப். 1ஆம் தேதிக்கு பின்னான அறிவிப்பு என்பதால், எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரெப்போ வட்டியை மேலும் 0.25 அதிகரிப்பதாக இன்றும் அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெப்போ வட்டி விகிதம் 6.25இல் இருந்து 6.50 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், QR Scan அடிப்படையில், சில்லறை கொடுக்கும் இயந்திரத்தை ஆர்பிஐ அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | RBI Monetary Policy: இனி எல்லா பொருட்களின் விலையும் கூடும்! ரெப்போ ரேட் அதிகரித்தது!


இதுகுறித்து ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது,"12 நகரங்களில் QR Code அடிப்படையிலான நாணய கொடுக்கும் இயந்திரத்தில் (QCVM) ஒரு முன்னோடித் திட்டத்தைத் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கும். இந்த விற்பனை இயந்திரங்கள் பணத்தாள்களை வழங்குவதற்குப் பதிலாக UPI சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளரின் கணக்கில் டெபிட் செய்யாமல் நாணயங்களை வழங்கும். இதுகுறித்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.


இதனால், நாணயங்களை எளிதில் அணுகலாம். இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி நாணயங்களை விநியோகிப்பதை ஊக்குவிக்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ரொக்க அடிப்படையிலான பாரம்பரிய நாணய கொடுக்கும் இயந்திரம் போலல்லாமல், QR Code அடிப்படையிலான விற்பனை இயந்திரம் ரூபாய் நோட்டுகள், அவற்றின் அங்கீகாரத்தின் தேவையை நீக்கும். வாடிக்கையாளர்கள் QCVMகளில் தேவையான அளவு மற்றும் மதிப்புகளில் நாணயங்களை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தையும் பெறுவார்கள்" என்றார்.


இதுகுறித்த ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில்,"இந்த முன்னோடித் திட்டம் முதற்கட்டமாக நாடு முழுவதும் 12 நகரங்களில் 19 இடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் எளிதாகவும் அணுகலையும் மேம்படுத்தும் வகையில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பைலட் சோதனைகளிலிருந்து கற்றல், QCVMகளைப் பயன்படுத்தி நாணயங்களின் சிறந்த விநியோகத்தை ஊக்குவிக்க வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அதானி குறித்து பேசாத பிரதமர்; அவரை காப்பாற்றுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது -ராகுல் காந்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ