RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி?
RBI Repo Rate: வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் 6.5% என்ற பழைய நிலையிலேயே தொடரும்.
RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பணவியல் கொள்கை குழு (எம்பிசி) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முடிவு 4:2 பெரும்பான்மையுடன் எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
நிதிக் கொள்கைக் குழு கூட்டம்
மூன்று நாட்கள் நீடித்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்தார். தொடர்ந்து எட்டாவது முறையாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் (Repo Rate) எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் பாலிசி விகிதமும் 6.5 சதவீத அளவில் வைக்கப்பட்டுள்ளது. எம்பிசி கூட்டத்தின் போது, ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக தாஸ் கூறினார். ரிசர்வ் வங்கி கடைசியாக ரெப்போ விகிதத்தை பிப்ரவரி 2023 இல் 6.5 சதவீதமாக உயர்த்தியது. அதன் பிறகு இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பணவீக்க விகிதம் உயர்வது குறித்து கவலை தெரிவித்த ரிசர்வ் வங்கி
வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das) தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் 6.5% என்ற பழைய நிலையிலேயே தொடரும். 6 MPC உறுப்பினர்களில் 4 பேர் கட்டண மாற்றத்திற்கு எதிராகவும் 2 பேர் இதற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். ரிசர்வ் வங்கியை 'குளோபல் சவுத்' -இல், முன்மாதிரியாக மாற்றும் நோக்கில் பணியாற்றி வருவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். பணவீக்க வளர்ச்சியின் சமநிலை சாதகமாக முன்னேறி வருகிறது. எனினும் உணவுப் பணவீக்க விகிதம் உயர்வது குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது
RBI இன்று எடுத்துள்ள முடிவு வீட்டுக் கடன் EMI செலுத்துபவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது நீங்கள் இப்போது செலுத்தும் அதே இஎம்ஐயை வரும் மாதத்திலும் செலுத்தலாம். பணவீக்கம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், மத்திய வங்கி அதில் எந்த மாற்றத்தையும் செய்யாது என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடர்கிறது. எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கையின்படி, மே மாதத்தில் பணவீக்க விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் புள்ளிவிவரங்கள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வரும். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.83 சதவீதமாக இருந்தது.
ஆண்டுக்கு 6 முறை எம்பிசி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன
ரிசர்வ் வங்கி ஆண்டும் 6 முறை, அதாவது 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை கூட்டங்களை நடத்துகின்றது. 2024-25 நிதியாண்டிற்கான இரண்டாவது MPC கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில், பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு, ரெப்போ விகிதம் ரிசர்வ் வங்கியால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், ரிசர்வ் வங்கி தேவை, வழங்கல், பணவீக்கம் மற்றும் கடன் போன்ற பல காரணிகளை மனதில் வைத்துக் கொள்கிறது.
அக்டோபரில் ரெப்போ ரேட் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜூன் மாதத்திற்கு பிறகு, அடுத்த எம்.பி.சி (MPC) கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். அடுத்த கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதம் குறையும் என்ற நம்பிக்கை இல்லை. தற்போது பணவீக்க விகிதம் அரசு நிர்ணயித்த வரம்பை தாண்டி செல்கிறது. பணவீக்க விகிதத்தை 2 முதல் 4 சதவீதம் வரை கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் தாக்கம் என்ன?
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைப்பது அல்லது அதிகரிப்பது வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை பாதிக்கிறது. ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டால், அதன் பிறகு, வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கான வட்டியும் வங்கிகளால் உயர்த்தப்படும். எளிமையான வார்த்தைகளில் கூறவேண்டுமானால், ரெப்போ விகிதம் அதிகரித்தால் வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்கின்றன. அதேபோல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். இது வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதங்களை அதிகரிக்கும். இது பொதுமக்கள் செலுத்தும் EMI மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ