RBI Monetary Policy:ஜூன் 7 ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா?

Monetary Policy Meeting: நிதிக் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2022-23 நிதியாண்டின் முதல் கூட்டம் ஏப்ரல்-2022 இல் நடைபெற்றது. அப்போது ஆர்பிஐ (RBI) ரெப்போ விகிதத்தை மாற்றாமல் ஆக அப்படியே வைத்திருந்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 5, 2024, 01:36 PM IST
  • 2022-23 நிதியாண்டில், ரெப்போ விகிதம் 2.50% உயர்த்தப்பட்டது
  • ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றங்களை செய்வது ஏன்?
  • ரிவர்ஸ் ரெப்போ விகிதம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ என்ன நடக்கும்?
RBI Monetary Policy:ஜூன் 7 ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா? title=

Monetary Policy Meeting: இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Meeting) இன்று (ஜூன் 5), புதன்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டம் ஜூன் 7ம் தேதி வரை நடைபெறும். இது 2024-25 நிதியாண்டின் இரண்டாவது கூட்டமாகும். இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் அதாவது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்போது ரெப்போ விகிதம் 6.50% ஆக உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.

2022-23 நிதியாண்டில், ரெப்போ விகிதம் 2.50% உயர்த்தப்பட்டது.

நிதிக் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2022-23 நிதியாண்டின் முதல் கூட்டம் ஏப்ரல்-2022 இல் நடைபெற்றது. அப்போது ஆர்பிஐ (RBI) ரெப்போ விகிதத்தை மாற்றாமல் ஆக அப்படியே வைத்திருந்தது. ஆனால் மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் அவசர கூட்டத்தை கூட்டி, RBI ரெப்போ விகிதத்தை 0.40% அதிகரித்து 4.40% ஆக உயர்த்தியது.

மே 22, 2020க்குப் பிறகு ரெப்போ விகிதத்தில் (Repo Rate) இந்த மாற்றம் நிகழ்ந்தது. இதன் பிறகு ஜூன் 6 முதல் 8 வரை நடைபெற்ற கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.50% உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ரெப்போ விகிதம் 4.40% லிருந்து 4.90% ஆக அதிகரித்தது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் 0.50% அதிகரித்து, 5.40% ஆனது.

செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதம் 5.90% ஆக அதிகரித்தது. அதன் பின்னர் டிசம்பரில் வட்டி விகிதம் 6.25% ஆனது.  இதற்குப் பிறகு, 2022-23 நிதியாண்டிற்கான கடைசி நிதிக் கொள்கை கூட்டம் பிப்ரவரியில் நடைபெற்றது, இதில் வட்டி விகிதங்கள் 6.25% லிருந்து 6.50% ஆக அதிகரிக்கப்பட்டன. அதன் பிறகு ரெப்போ விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றங்களை செய்வது ஏன்? 

பணவீக்கத்தை எதிர்த்துப் போராட ரிசர்வ் வங்கியிடம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக ரெப்போ விகிதம் பார்க்கப்படுகின்றது. பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும்போது, ​​ரெப்போ விகிதத்தை அதிகரித்து பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி முயற்சிக்கிறது. ரெப்போ விகிதம் அதிகமாக இருந்தால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன் விலை அதிகமாக இருக்கும். பதிலுக்கு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் தேவை குறைந்து பணவீக்கம் குறையும்.

மேலும் படிக்க | தேர்தல் முடிவுகளுக்கும் பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த அதிரடி சரிவு?

அதேபோன்று, பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்லும்போது, ​​மீட்சிக்கு பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கிறது. இதன் காரணமாக, ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு கிடைக்கும் கடன் மலிவாகி, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் கடனின் வட்டி குறைகிறது. 

இந்த உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். கொரோனா காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித போது, ​​தேவை குறைந்தது. இத்தகைய சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரித்தது.

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ என்ன நடக்கும்? 

ரெப்போ ரேட் என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவி இது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதமாகும். ரிசர்வ் வங்கி சந்தையில் இருந்து பணப்புழக்கத்தை குறைக்க வேண்டியிருக்கும் போது, ​​அது ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை அதிகரிக்கிறது. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் தங்கள் பங்குகளுக்கான வட்டியைப் பெற்று இதைப் பயன்படுத்திக் கொள்கின்றன. பொருளாதாரத்தில் அதிக பணவீக்கத்தின் போது ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் அதிரடியாய் உயர்கிறது அடிப்படை ஊதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News