RBI முக்கிய விதிகளில் மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குஷி.... கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

CIBIL Score: சில காலமாக கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்து வண்ணம் இருந்தன. இதன் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி சிபில் ஸ்கோர் தொடர்பாக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டது.
CIBIL Score: பல வித கட்டணங்களை செலுத்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) சில புதிய விதிகளை வகுத்துள்ளது. அவற்றை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
சிபில் ஸ்கோர்
சில காலமாக கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்து வண்ணம் இருந்தன. இதன் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி சிபில் ஸ்கோர் தொடர்பாக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டது. இது தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டன. புதிய விதிகள் ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் கீழ், சிபில் ஸ்கோர் தொடர்பாக ஆர்பிஐ (RBI) மொத்தம் 5 விதிகளை உருவாக்கி செயல்படுத்தியுள்ளது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
CIBIL Socre -ஐ செக் செய்வது பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு வங்கி (Banks) அல்லது NBFC வாடிக்கையாளரின் கடன் அறிக்கையை (Credit Report) எப்போதெல்லாம் செக் செய்கிறார்களோ, அதற்கான தகவல்களை அந்த வங்கி அல்லது NBFC வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது அவசியம் என்று ரிசர்வ் வங்கி அனைத்து கடன் தகவல் நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளது. இந்த தகவலை எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். வாடிக்கையாளர்களிடமிருந்து கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக பல புகார்கள் வந்ததால், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும்
வாடிக்கையாளரின் எந்த ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம், தங்கள் கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் எளிதாக புரிந்துகொள்ள முடியும். கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அது, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்பட வேண்டும்.
மேலும் படிக்க | EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்
ஆண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முழு கடன் அறிக்கையை வழங்க வேண்டும்
கடன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு (Bank Customers) வருடத்திற்கு ஒரு முறை இலவச முழு கிரெடிட் ஸ்கோரை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதற்காக, கிரெடிட் நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு இணைப்பைக் காண்பிக்க வேண்டும். இந்த இணைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் இலவச முழு கடன் அறிக்கையை எளிதாகப் பார்க்க வசதி அளிக்கப்பட்ட வேண்டும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் CIBIL ஸ்கோர் மற்றும் முழுமையான கிரெடிட் வரலாற்றை வருடத்திற்கு ஒருமுறை தெரிந்து கொள்வது எளிதாகும்.
டீஃபால்ட் பற்றி புகாரளிக்கும் முன் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்
ஒரு வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் டீஃபால்டர் ஆகவுள்ளார் என்றால், அதைப் பற்றி புகார் அளிக்கும் முன், வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்து தகவல்களையும் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது தவிர வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த நோடல் அதிகாரிகள் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
புகார்கள் 5 முதல் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்
வாடிக்கையாளர்களின் அனைத்து புகார்களும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். கடன் தகவல் நிறுவனம் 30 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் புகாரை தீர்க்கவில்லை என்றால், வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்தப்பட வேண்டும். அதாவது, புகார் எவ்வளவு தாமதமாக தீர்க்கப்படுகிறதோ, வாடிக்கையாளருக்கு அவ்வளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
புகார்களை தீர்க்க கடன் வழங்கும் நிறுவனத்திற்கு 21 நாட்களும், கிரெடிட் பீரோவுக்கு 9 நாட்களும் வழங்கப்படும். 21 நாட்களுக்குள் வங்கி கடன் பணியகத்திற்கு தெரிவிக்கவில்லை என்றால், வங்கி இழப்பீடு வழங்க வேண்டும். வங்கியில் இருந்து 9 நாட்களுக்குப் பிறகும் புகார் தீர்க்கப்படாவிட்டால், கிரெடிட் பீரோ இழப்பீடு செலுத்த வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பணிகள் வேகமாக நடந்து புகார்கள் விரைவாக தீர்க்கப்ப்படுவதை உறுதி செய்கின்றன.
சமீப காலங்களில் வங்கி வாடிக்கையாளர்களின் செயல்முறைகளை எளிதாக்கவும், பாதுகாப்பான வங்கி பரிமாற்றங்களை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ