RBI vs EOI: அனில் அம்பானியின் நிறுவனத்தை விற்கும் நடவடிக்கை தொடங்கியது
அனில் அம்பானியின் நிறுவனம் விற்கப்பட உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது
புதுடெல்லி: அனில் அம்பானியின் நிறுவனம் விற்கப்பட உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடனில் மூழ்கியிருக்கும் தொழிலதிபர் அனில் அம்பானியின் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக இவரது நிறுவனத்திற்கு செபி கட்டுப்பாடு விதித்த நிலையில், தற்போது நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தம் தொடங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) நியமிக்கப்பட்ட நிர்வாகி அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கேபிட்டலை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அதாவது expression of interest (EOI) எனப்படும் நடைமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்கான செயல்முறை தொடங்கியதன் முதல் படியாகும்.
மேலும் படிக்க | வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் 8.4 பில்லியன் டாலர்கள் முதலீடு
EOI என்றால் என்ன?
ரிசர்வ் வங்கியின் EOI என்பது, அனில் அம்பானியின் நிறுவனத்தின் விற்பனையின் தொடக்கத்திற்கான அறிகுறியாகும். இதன் மூலம் ரிலையன்ஸ் கேபிட்டலை வாங்க விரும்பும் நிறுவனங்கள், அதற்கான விருப்பக் கடிதத்தைக் கொடுக்க வேண்டும்.
ரிலையன்ஸ் கேபிட்டல்ஸ் நிறுவனத்தை வாங்க விருப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 11 ஆகும். அதே நேரத்தில், ரிலையன்ஸ் கேபிட்டலின் தீர்மானத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 20 ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரிலையன்ஸ் கேபிடல் விற்பனையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ரிலையன்ஸ் கேபிட்டலின் சிரமங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, அதன் விளைவு பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. நேற்று (2022, பிப்ரவரி 19), ரிலையன்ஸ் கேபிட்டல் பங்கு விலை மோசமான சரிவைக் கண்டது..
வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் கேபிட்டல் பங்கு விலை 2.48 சதவீதம் நஷ்டத்துடன் ரூ.13.75 ஆக இருந்தது. ரிலையன்ஸ் கேபிடல்ஸின் சந்தை மூலதனம் 347.47 கோடியாக உள்ளது.
மேலும் படிக்க | சீனாவுடனான உறவை தீர்மானிப்பது எது?
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டு மட்டத்தில் கடுமையான சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் கேபிட்டல் (RCL) இன் இயக்குநர்கள் குழுவை கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கலைத்தது,.
அதன் தொடர்ச்சியாக நாகேஸ்வர ராவ் ஒய் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாகியாக, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்திற்கு எதிராக கார்ப்பரேட் இன்சல்வென்சி ரெசல்யூஷன் பிராசஸ் (National Company Law Tribunal (NCALT)) தொடங்க தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (என்சிஏஎல்டி) மும்பை பெஞ்சில் ஆர்பிஐ மேல்முறையீடு செய்தது.
அதே நேரத்தில், அனில் அம்பானியின் நிதி நிறுவனமான ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸும் தடை செய்யப்பட்டு சந்தையில் வணிகம் செய்வற்கு தடை செய்யப்பட்டது. இவை அனைத்துமே, அனில் அம்பானி சிக்கல்களால் சூழப்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் படிக்க | அலிபாபா உட்பட 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR