HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்தவாக அறிவித்துள்ளார்...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமாகவும் நாட்டின் 3-வது பெரிய IT நிறுவனமாகவும் (HCL) இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்தவரான ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்ப நிறுவனம் உபி நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறது. 


இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் திகழும் HCL நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷ்ணி நாடார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார்பொறுப்பில் இருந்து விலகினார். புதிய பொறுப்பை ரோஷ்ணிநாடார் மல்ஹோத்ரா உடனடியாக ஏற்பதாக PSE-க்கு அனுப்பப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஷிவ் நாடார் விலகினாலும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக (MD) அவர் தொடர்வார். அத்துடன் கூடுதல் பொறுப்பாக தலைமை உத்தி வகுக்கும் அதிகாரியாக அவர் இருப்பார் என PSE-க்கு அனுப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனத்தின் லாபம் ₹.2,220 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் வருமானம் 8.6% அதிகரித்து ₹.17,841 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதி ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ₹.16,425 கோடியாக இருந்தது.


READ | நாய் தாக்குதலில் இருந்து தங்கையை காப்பாற்றிய 6 வயது சிறுவன்..!


நிறுவனத்தில் தற்போது 1,50,287 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கூடுதலாக சுமார் 7,005 பணியாளர்கள் புதிதாக பணியமர்தப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 14.6% ஆக உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவராக ரோஷ்ணி உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ₹.31,400 கோடி. இவருக்கு வன விலங்குகள் மீது அதீத ஆர்வம் உண்டாம். இதற்காகவே இவர் ஹேபிடட்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி அதை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.


டெல்லியில் வளர்ந்த ரோஷ்ணி, அமெரிக்காவின் கெல்லாக் நிர்வாகவியல் மையத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்நிலையில், உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களில் ஒருவராகவும் இவர் விளங்குகிறார் என்பது குறிப்பிடதக்கது.