வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது, வீடியோ அல்லது ஆடியோ கால் செய்வது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் வாட்ஸ் அப்பில் கடன் வாங்கலாம் என்றால் நம்பமுடியுமா? ஆம், உண்மை தான் ஒரு நிறுவனம் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கடன் வசதியை வழங்குகிறது.  ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் வாட்ஸ்அப் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வணிகக் கடன்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.  ஐஐஎஃப்எல் பைனான்ஸின் இந்த புதிய முயற்சியானது எம்எஸ்எம்இ கடன் துறையில் ஒரு கேம்-சேஞ்சர் ஆகும் என்று நம்பப்படுகிறது.  இந்த நிறுவனத்தில் கடன் விண்ணப்பம் முதல் பணப் பரிமாற்றம் வரை 100% டிஜிட்டல் செயல்முறையிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் 450 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களுடன், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் வழங்கும் இந்த 24x7 எண்ட்-டு-எண்ட் டிஜிட்டல் கடன் வசதியினை பெற்று பயனடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான செய்தி: ஊழியர்களின் ஊதியம் 44% உயரும்


10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை என்பிஎஃப்சி-களில் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.  இந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வங்கியுடன் இணைக்கப்படவில்லை, மேலும் இது சிறிய அளவிலான தொழில்களுக்கு கடன்களை வழங்குகிறது.  நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் பரவி டிஜிட்டல் முறையில் கிடைப்பதால், விரைவான கடனை எதிர்பார்க்கும் சிறு வணிகர்களுக்கு இந்த நிறுவனம் சரியான தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனம் வழங்கக்கூடிய இந்த அற்புதமான வசதியைப் பெற, AI-bot கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.  உங்கள் விண்ணப்பம் தேவையான அனைத்து விவரங்களுடனும் பொருந்தினால், எந்த நேரத்திலும் உங்கள் கடனுக்கான ஒப்புதலை நீங்கள் பெறுவீர்கள்.  


ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனம் வழங்கக்கூடிய வாட்ஸ் அப் கடன் சேவைக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை முற்றிலும் காகிதமற்றது, இதன் செயல்முறை முழுவதும் டிஜிட்டல் முறையிலேயே நடைபெற்று வருகிறது.  மேலும் 9019702184 என்ற எண்ணிற்கு "ஹாய்" என்று டைப் செய்து மெசேஜ் அனுப்புவதன் மூலம் நீங்கள் இந்த சேவையை பெறலாம்.  ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் தற்போது ரூ.1 லட்சம் எம்எஸ்எம்இ கிரெடிட் விசாரணைகளை அதன் வாட்ஸ் அப் லோன் சேனல் மூலம் நிர்வகித்து வருகின்றது.  பலரும் அணுகக்கூடிய கடன் நிறுவங்களுள் இது சிறந்த கடன் வழங்கும் நிறுவனமாக விளங்கி வருகின்றது.


ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனத்தின் வணிகத் தலைவர் பாரத் அகர்வாலின் கூற்றுப்படி, தங்களது நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி சிறு வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றும், கடன் விண்ணப்பம் சமர்பிப்பதில் உள்ள சிக்கல்களையும் இந்த முயற்சி எளிதாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.  பொதுவாக வயது மற்றும் மாத வருமானம் உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலை பாதிக்கும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், கடன் வாங்குவதற்கு உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான காரணியாக இருக்கும்.  300 முதல் 900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் உள்ளது, இதில் அதிக மதிப்பெண்கள் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் எளிதில் கடன் வழங்கி விடுவார்.  அதேசமயம் குறைந்த மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கு கடன் ஆபத்துகள் அதிகம், அவர்களுக்கு கடன் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கப்பெறாது.


மேலும் படிக்க | PAN Card Limit: 2 பான் கார்ட் வைத்து இருந்தால் இவ்வளவு தண்டனையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ