RuPay கார்டு சலுகைகள்: நீங்கள் RuPay இன் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆம், பண்டிகை காலத்தை மனதில் வைத்து, இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 'RuPay Festive Carnival' ஐ கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் கேப் ரைடில் 50% என்ற பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. RuPay கார்டு மூலம் காப் சவாரிகளுக்கு பணம் செலுத்தினால், 50% தள்ளுபடி கிடைக்கும். ரூபே தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ட்விட்டர் கணக்கில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்தச் சலுகையைப் பெற நீங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்தலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் மொத்தம் ரூ.300 வரை தள்ளுபடி பெறலாம்.


RuPay இன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் கேப் சவாரிக்கு பணம் செலுத்தினால், உங்களுக்கு 50 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 100) தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், கேப் பயணங்களுக்கு 50% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ. 50) கிடைக்கும்.


மேலும் படிக்க | இந்த காரணங்களால் உங்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் 


ஒரு கார்டு மூலம் அதிகபட்சமாக இரண்டு முறை சலுகையைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடம் RuPay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இரண்டும் இருந்தால், இந்தச் சலுகையை 4 முறை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கேப் ரைடுகளில் ரூ.300 வரை (கிரெடிட் கார்டில் இரண்டு முறை ரூ.100, மற்றும் டெபிட் கார்டில் ரூ.50 இரண்டு முறை) சேமிக்கலாம். 


ரூபே கார்டின் இந்த சலுகை செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்


இருப்பினும், இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த RuPay சலுகையின் பலன் உபரில் ( Uber) கேப் சவாரிக்கு முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும். ரூபே கார்டின் இந்தச் சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 30க்குப் பிறகு, இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியாது.



ருபே கிரெடிட் கார்டு மூலம் உபர் கேப் சவாரிக்கு பணம் செலுத்தினால், RUPAYCRED9 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். டெபிட் கார்ட் மூலம் ஊபர் வண்டிச் சவாரிக்கு பணம் செலுத்தினால், RUPAYDEB9 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.


மேலும் படிக்க | Savings Tips: மாத சம்பளத்தில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்; செய்ய வேண்டியது இதுதான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ