Savings Tips: மாத சம்பளத்தில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்; செய்ய வேண்டியது இதுதான்

கை நிறைய பணம் இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள், தங்களுக்கு மாதம் வரும் வருமானத்தின் வழியாகவே பணக்காரர்களாக மாறிவிட முடியும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2022, 08:11 AM IST
  • மாத சம்பளத்தில் நீங்கள் பணக்காரர் ஆகலாம்
  • வீண் செலவுகளை கண்டறிந்து கைவிடுங்கள்
Savings Tips: மாத சம்பளத்தில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்; செய்ய வேண்டியது இதுதான் title=

பணம் தேவைக்கு அதிகமாக இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணினால், உங்களிடம் வரும் பணத்தின் மதிப்பை நீங்கள் கட்டாயம் உணர வேண்டும். செலவு என்பது உங்கள் தேவைகளை நிறைவேற்றுது. ஆனால் சிலர் தேவைக்கு அதிகமாக பணம் செலவழிக்கிறார்கள். நாம் பணத்தை செலவழிக்கும்போது, ​​நமது வருமானம் மற்றும் செலவு இரண்டையும் பார்க்க வேண்டும். நமது செலவு பட்ஜெட்டை விட அதிகமாக இருந்தால், அது வீண் செலவாகக் கருதப்பட வேண்டும். இதனை நீங்கள் கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டும். 

உணவில் கட்டுப்பாடு

எப்பொழுதிலிருந்து ஆன்லைன் யுகம் வந்ததோ, அன்றிலிருந்து நாம் அனைவரும் வீட்டின் உணவை மறந்துவிட்டோம். ஒரு டிஷ் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் போனை எடுத்து சாப்பாடு ஆர்டர் செய்கிறோம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த உணவுகள் ஆரோக்கியமானதாகவும் இருப்பதில்லை. இருப்பினும் துரித உணவு போன்ற ஆரோக்கியமற்ற உணவை நாங்கள் ஆர்டர் செய்கிறோம். இதற்கு முதலில் உங்களிடம் கட்டுப்பாடு வர வேண்டும். வெளி உணவுகளை உண்ணக் கூடாது என்று உங்களுக்கு நீங்களே சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பணம் மட்டுமல்ல ஆரோக்கியமும் மேன்மையடையும்.

மேலும் படிக்க | தினமும் ஷாம்பூ யூஸ் பண்றீங்களா?... இது உங்களுக்குத்தான்

அழகு சாதன பொருட்கள்

சிலருக்கு மேக்கப் செய்வது என்பதே பொழுதுபோக்காக இருக்கிறது. இதற்காக அதிக பணம் செலவழிக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த பணம் தேவையற்ற அழகு சாதனங்களை ஆர்டர் செய்வதிலும், சில நேரங்களில் விலையுயர்ந்த சலூன்களிலும் செலவிடப்படுகிறது. இப்படி செய்வதால் உங்களின் நிதி வருவாய் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால், அதுபோன்ற விலை உயர்ந்த பார்லர்களை தவிர்த்து விலை குறைவான பார்லருக்குச் செல்லலாம்.  பயனற்ற தயாரிப்புகளை முயற்சிக்காக வாங்க வேண்டாம். 

வார இறுதிநாள் ஆடம்பரம்

ஒவ்வொரு வார இறுதியிலும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பொழுதுபோக்கிற்காகவும் எங்காவது செல்கிறார்கள். சிலர் பந்தயத்தில் ஈடுபடுவதும் இப்போது அதிகரித்திருக்கிறது. தங்களின் நிலையைக் காட்டுவதற்காக வெளிநாட்டுப் பயணம் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதற்கு தங்களின் வரம்பை விட செலவும் செய்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைனில் உலாவும்போது கண்களை பறிக்கும் சில பொருட்களை பார்க்க நேரிடும். ஆஃபரில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக உங்களுக்கு தேவையில்லாத பொருள் என்றாலும் வாங்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. தேவை எது என்பதை அறிந்து ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டும்.  

மது, சிகரெட்டுக்கான செலவு 

மது அருந்துவதும், சிகரெட் குடிப்பதும் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இந்த இரண்டு விஷயங்களிலும் பெரும்பாலான பணம் செலவழிக்கப்படுகிறது. இது நல்லதல்ல. இரண்டாவதாக அவை நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பையாகவும் இருக்கின்றன. இதுபோன்ற விஷயங்களை உடனடியாக கைவிட வேண்டும், இல்லையெனில் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | ரூபாய் தாளில் 786 இருந்தால், நீங்கள்தான் லட்சாதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News