ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஆதார் இல்லாவிட்டால் அரசின் மானிய உதவிகளையும் பெறமுடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பது தற்போது கட்டாயமாகும். சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகை, விவசாய நிதியுதவி போன்ற நலத் திட்ட உதவிகள் அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். 


ALSO READ | SBI வங்கியில் புதிய மாற்றம், வங்கி வாடிக்கையாளர்களுக்காக முக்கிய தகவல்


இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India) தனது வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறவேண்டுமானால் சேமிப்புக் கணக்கில் ஆதாரைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்று ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆன்லைன் பேங்கிங் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். ஏடிஎம் மெஷின் மூலமாகவும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க முடியும். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR