PF உறுப்பினர்களுக்கு பெரிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம், விவரம் இதோ

EPF Withdrawal: இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள மொத்த தொகையில், பகுதியளவு தொகையை எடுப்பதற்கான விதிகளை EPFO ​​மாற்றியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 16, 2024, 11:11 AM IST
  • இபிஎஃப்ஓ புதிய விதிகள் என்ன?
  • PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான செயல்முறை என்ன?
  • எந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்?
PF உறுப்பினர்களுக்கு பெரிய அப்டேட்: EPF பணத்தை எடுக்கும் விதிகளில் மாற்றம், விவரம் இதோ title=

EPF Withdrawal: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு பல வித வசதிகளை வழங்கி வருகிறது. EPFO இல் முதலீடு செய்வதன் மூலம், ஒருபுறம், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பணி ஓய்வுக்கு பிறகு ஒரு பெரிய நிதி மொத்தமாக கிடைக்கிறது. இது தவிர, உறுப்பினர்களை சில குறிப்பிட்ட சந்தப்பங்களில் பகுதியளவு தொகையையும் திரும்பப் பெற EPFO ​​அனுமதிக்கிறது. 

EPFO Withdrawal Rules

சமீபத்தில் இபிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம். 

இபிஎஃப்ஓ புதிய விதிகள் (EPFO New Rules)

இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள மொத்த தொகையில், பகுதியளவு தொகையை எடுப்பதற்கான விதிகளை EPFO ​​மாற்றியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். பிஎஃப் கணக்கிலிருந்து பகுதியளவு பணம் எடுப்பதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இப்போது இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) இபிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்க முடியும். முன்னர் இந்த தொகை ரூ.50,000 ஆக இருந்தது.

இது தவிர, இப்போது வேலையில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் பணத்தை எடுக்கலாம். முன்னதாக, உறுப்பினர்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) முழுமையாக எடுக்க அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அது மாறிவிட்டது. ஒரு ஊழியர் 6 மாதங்களுக்குள் வேலையை விட்டு வெளியேறினாலும், இப்போது அவர் PF கணக்கிலிருந்து முழுமையாக பணத்தை எடுக்கலாம்.

PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான செயல்முறை

- முதலில் EPFO இன் இ-சேவை போர்ட்டலுக்குச் செல்லவும். 
- இங்கே உறுப்பினர் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- லாக் இன் செய்த பின்னர்,  ‘Online Services’ -க்குச் செல்லவும்.
- இப்போது படிவம்-31, 19, 10C மற்றும் 10D ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும்.
- இப்போது படிவம் 31ஐத் தேர்ந்தெடுத்து, பணம் எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
- அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
- அதை நிரப்பி சமர்ப்பிக்கவும்.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ

படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு,  ‘Online Services’ -க்கு சென்று, உங்கள் ஸ்டேடசை கண்காணிக்கவும். பணத்தை க்ளெய்ம் செய்து 7 முதல் 10 நாட்களுக்குள் இபிஎஃப் தொகை EPFO ​​மூலம் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

எந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப் தொகையை எடுக்க முடியும்:

பொதுவாக, இபிஎஃப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் தொகையை முழுமையாக வித்டிரா செய்கிறார்கள். எனினும், அதற்கு முன்னரும், சில சந்தர்ப்பங்களில் பணத்தை எடுக்க இபிஎஃப்ஓ அனுமதிக்கிறது.

- மருத்துவச் செலவுகள்
- திருமணம்
- கல்வி 
- குடும்பத்தில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால்

இந்த சந்தர்ப்பங்களில் இபிஎஃப்ஒ உறுப்பினர்கள் பகுதியளவு தொகையை எடுக்க அனுமதி உள்ளது.

மேலும் படிக்க | No Toll Tax... இந்த மாநிலத்தில் சுங்க கட்டணத்திற்கு விலக்கு... காரணம் இது தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News