SBI எச்சரிக்கை: இதை செய்யவில்லை என்றால், உங்களுக்கு வங்கியின் சேவைகள் கிடைக்காது
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. பான் கார்டை ஆதாருடன் செப்டம்பர் 30 க்கு முன் இணைக்குமாறு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களை வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால் அவர்கள் வங்கிச் சேவையில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று வங்கி கூறியுள்ளது. இதை தெரியப்படுத்தும் விதமாக SBI ஏற்கனவே ட்வீட் செய்துள்ளது.
செப்டம்பர் 30 வரை வாய்ப்பு
SBI தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'அனைத்து விதமான சிரமங்களையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அறிவுறுத்துகிறோம்.’ என்று கூறியுள்ளது.
பான் எண்ணை ஆதார் உடன் இணைப்பது கட்டாயம் என்று வங்கி தெரிவித்துள்ளது. PAN மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், PAN செயலற்றதாகிவிடும் மற்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள PAN ஐ பயன்படுத்த முடியாது. பான் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2021 ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கடந்த மாதம், மத்திய அரசு பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்தது. முன்னதாக இந்த காலக்கெடு மார்ச் 31 என நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது ஜூன் 30 ஆக திருத்தப்பட்டது.
பான்-ஆதார் அட்டை இணைப்பிற்கான வழிமுறை இதோ:
ALSO READ: SBI Bumper News: வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச செய்தி, வங்கியின் மிகப்பெரிய சலுகை
முதல் வழி
1- முதலில் வருமான வரித்துறையின் (Income Tax) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometaxindiaefiling.gov.in/home-க்கு செல்லவும்.
2- இங்கே இடது பக்கத்தில் நீங்கள் ஆதார் இணைப்புக்கான ஆப்ஷனைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.
3- பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் பான், ஆதார் ஆகியவற்றில் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அந்த விதத்தில் பெயரை எழுதவும்.
4- உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டுமே இருந்தால், 'எனக்கு ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டுமே உள்ளது' ('I have only year of birth in aadhaar card' ) என்ற பாக்சை டிக் செய்யவும்.
5- கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும் அல்லது OTP க்காக டிக் செய்யவும்
6- 'Link Aadhaar' பொத்தானைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு பான் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும்.
மற்றொரு வழி
- நீங்கள் பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை எஸ்எம்எஸ் மூலமும் இணைக்கலாம்
- மொபைலின் செய்தி பெட்டியில், UIDPAN <12 இலக்க ஆதார்> <10 இலக்க PAN> என டைப் செய்யவும்
- இந்த செய்தியை 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும். இதன் பிறகு பான் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும்.
ALSO READ: SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: புதிய அம்சம் அறிமுகம், நன்மைகள் ஏராளம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR