வரி செலுத்துவோருக்கு அதிர்ச்சி தகவல்! IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்

வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தியாக வருமான வரி பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்.  போர்ட்டலில் பிரச்சினைகள் இருப்பதால் வரி செலுத்துவோர் வரி ரீபண்ட் கிடைக்க காத்திருக்க வேண்டியிருக்கும்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2021, 08:11 PM IST
  • வரி செலுத்துவோருக்கு முக்கியமான செய்தி
  • வருமான வரிக்கான புதிய போர்டலில் சிக்கல்கள்
  • ஐடி பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்
வரி செலுத்துவோருக்கு அதிர்ச்சி தகவல்! IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்

Income Tax Refund Status: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம்  ஜூன் மாதம்  7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையின் புதிய போர்டலான http://www.Incometax.Gov.In/ என்ற தளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன.

இதன் காரணமாக வருமான வரித் துறை வழங்கும் ரீபண்ட்  இந்த ஆண்டு தாமதமாகலாம். வருமான வரியின் இந்த புதிய போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, வரி பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படக்க்கூடும் என கூறப்படுகிறது. இந்த போர்டல் தொடங்கப்பட்டதிலிருந்தே, சில தொழில்நுட்பசிக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சினைகளுக்கான காரணம்

புதிய வருமான வரி போர்ட்டலில்  (New Incomr Tax Portal) தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதால், பணத்தை ரீபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதோடு, விண்ணப்பதாரர்கள் வங்கி கடன், விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்கும் அதிக நேரம் தேவைப்படுகிறது. முந்தைய வருமான வரி தாக்கல் குறித்த தகவல்களை அணுகுவதிலும் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக,  வழக்கமான வேலைகளும் பாதிக்கப்படுகின்றன.

ALSO READ | வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

நிதியமைச்சருக்கு கடிதம் 

வருமான வரித் துறையின் இந்த புதிய போர்ட்டலில் வரும் தொழில்நுட்ப சிக்கல்களால், வரி செலுத்துவோரைத் தவிர,  தொழில் வல்லுநர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், போர்ட்டலின் குறைபாடுகளை நீக்கி, அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மூத்த அதிகாரிகள் நிதியமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளனர். நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

புதிய வலைதளம் தொடங்கப்பட்டதிலிருந்தே சிக்கல்கள்

வருமான வரித்துறை ஒரு புதிய போர்ட்டலை http://www.Incometax.Gov.In/ ஜூன் 7 அன்று அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்தே, இந்த இணையதளத்தில் சிக்கல்கள் உள்ளன. இது குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதமும் நடந்தது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வலைத்தளத்தை தயாரித்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் தலைவரான நந்தன் நிலேகானியை அழைத்து பேசியதை அடுத்து, அனைத்து குறைபாடுகளும் நீக்கப்பட்டன. ஆனால் இன்னும் அதில் சில சிக்கல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: SBI Alert: எஸ்பிஐ வங்கியின் பயனுள்ள அறிவிப்பு; வங்கி பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News