SBI Gold Loan: நீங்கள் உங்கள் சொந்த தொழிலை செய்துகொண்டிருந்தாலோ அல்லது அதைச் செய்யத் திட்டமிட்டிருந்தாலோ, SBI வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. SBI வர்த்தகர்களுக்கு SME தங்கக் கடன்களை மிக எளிதாக வழங்குகிறது. இந்த தங்கக் கடன் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சங்களைக் கொண்டது. ஏனெனில் இதைப் பெறுவதற்கு அதிக அளவிலான சிரமங்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிக எளிதாகக் கிடைக்கும் ஒரு சிறந்த கடனாகும் இது. தொலைபேசி மூலமாகவோ அல்லது அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்றோ நீங்கள் இது குறித்த முழுமையான தகவல்களைப் பெறலாம்.


SBI-யின் SME தங்க கடன்


SBI-யின் இந்த தங்க கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம். SBI-யின் இந்த சலுகையின் மூலம், வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். SBI அவ்வப்போது பல சலுகைகளை அறிவிக்கின்றது. ஆனால், இந்த குறிப்பிட்ட சலுகை SME துறைக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம்


SBI-யின் இந்த சிறப்பு தங்கக் கடன் சலுகை 7.25 சதவீதம் என்ற மிகக் குறைந்த ஆண்டு வட்டி விகிதத்திலேயே கிடைக்கிறது. இதை இந்த வகையில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் தங்கக் கடனை (SBI Loan) எடுத்தால், இதற்கான வட்டியாக 7,250 ரூபாயை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். தனது SME Gold Loan-னின் வட்டி விகிதம் மற்ற அனைத்து வங்கிகளையும் விட குறைந்தது என்றும், இதில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் SBI கூறுகிறது.


ALSO READ: ATM வரிசையில் நிற்க வேண்டாம்: SBI ADWM மூலம் நொடியில் பணம் போடலாம், எடுக்கலாம்


பாலன்ஸ் ஷீட் இல்லாமலும் கடன் கிடைக்கும்


பொதுவாக, வர்த்தகர்கள் எந்தவிதமான கடனை வாங்குவதற்கும் பாலன்ஸ் ஷீட்டைக் காட்ட வேண்டி இருக்கும். ஆனால் SBI-யின் இந்த சிறப்பு சலுகையில் இருப்புநிலைக் குறிப்பைக் (Balance Sheet) காட்ட வேண்டிய அவசியமில்லை. உங்கள் தங்கத்தை அடகு வைத்து நீங்கள் கடன் வாங்க முடியும்.


SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டில் சிறப்பு தங்க கடன் சலுகை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. SBI, தனது வாடிக்கையாளர்கள் தங்களது அருகிலுள்ள கிளைக்குச் சென்று இந்த சிறப்பு தங்கக் கடன் சலுகை குறித்த முழுமையான தகவல்களைப் பெறலாம் என்று கூறியுள்ளது. கடனைப் பெறுவதற்கான முழு செயல்முறையும் மிகவும் எளிதானது என்றும் கடன் வாங்கும் எவருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் செயல்முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் SBI தெரிவித்துள்ளது.


ALSO READ: SBI Internet Banking: 2 நிமிடங்களில் வீட்டில் இருந்த படி எவ்வாறு பதிவு செய்வது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR