புது டெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏடிஎம், பணத்தை திரும்பப் பெறுதல், காசோலை புத்தக கட்டணம் ஆகியவற்றில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருகிற ஜூலை 1, 2021 முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வருகிறது. புதிய கட்டணங்கள் ஏடிஎம் திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம், பரிமாற்றம் மற்றும் பிற நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். எந்தவொரு நபரும் எஸ்பிஐ (SBI) அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும். ஆனால் KYC ஆவணங்கள் மூலம் இதை செய்ய முடியும்.


ALSO READ | இனி வங்கிக்கு போக வேண்டாம், இதை மட்டும் செஞ்சாலே போதும்!


எஸ்பிஐ (SBI) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இந்த கணக்கு வைத்திருப்போருக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் வழங்கப்படுகிறது. BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி கிளை மற்றும் ஏடிஎம்கள் மூலம் 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுக்கலாம். அதன்பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 +GST கட்டணமாக வசூலிக்கப்படும்.


எஸ்.பி.ஐ தனது BSBD வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 செக் லீப்களை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, 10 லீப் செக் புக்கிற்கு ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 25 லீப் செக் புக்கிற்கு ரூ .75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் அவசரமாக செக்புக் தேவைப்பட்டால் அதில் 10 அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 


குறிப்பு: எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் BSBD கணக்கு வைத்திருப்பவர்களால் நிதி அல்லாத பரிவர்த்தனை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR