எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஜனவரி முதல் விதிகளில் மாற்றம்!
சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரே ஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற முடியும் மற்றும் இதனை எவ்வித வவுச்சருடனும் இணைக்க முடியாது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புதிய விதிகளை திருத்தி அமைத்துள்ளது, இந்த புதிய விதிகள் ஜனவரி 2023 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவதற்கான இரண்டு விதிகள் 2023ம் ஆண்டு முதல் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரே ஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற முடியும் மற்றும் இதனை எவ்வித வவுச்சருடனும் இணைக்க முடியாது. ஜனவரி 1 முதல் அமேசான்.இன்-ல் சிம்ப்ளிக்ளிக் மூலம் ஆன்லைனில் கிடைக்கு ரிவார்டுகள் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்படும். அதாவது அமேசான்.இன்-ல் சிம்ப்ளிக்ளிக் மூலம் 10X ரிவார்டு பாயிண்ட்கள் பெற்றுவந்த நிலையில் தற்போது அந்த எண்னிக்கை ஜனவரி 01 முதல் 5X ரிவார்டு பாயிண்ட்டுகளாக மாற்றப்படும். 10X ரிவார்டு புள்ளிகள் அப்பல்லோ 24Xhow, க்ளியர்ட்ரிப், லென்ஸ்கார்ட், நெட்மெட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கிறது.
கிரெடிட் கார்டில் உள்ள பேமெண்ட்டுகள் நவம்பர் 15 முதல் திருத்தப்படும். வணிகர் இஎம்ஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கான ப்ராசஸிங் கட்டணம் வரிகளுடன் சேர்த்து ரூ. 199 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னர் இந்த ப்ராசஸிங் கட்டணம் வரிகளுடன் சேர்த்து ரூ. 99 ஆக இருந்தது, தற்போது இதன் அளவும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ