7th Pay Commission: மார்ச் மாதத்திற்குள் அரசு ஊழியர்களுக்கு 5% டிஏ உயர்வு? முழு விவரம்!

7th Pay Commission: இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதன் மூலம் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்தது. 

Written by - RK Spark | Last Updated : Dec 20, 2022, 07:34 AM IST
  • ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் அதிகரிக்க வாய்ப்பு.
  • மத்திய அரசு அகவிலைப்படியை 38 சதவீதமாக அதிகரித்தது.
  • மார்ச் 2023க்குள் மத்திய அரசு மீண்டும் உயர்த்த வாய்ப்பு.
7th Pay Commission: மார்ச் மாதத்திற்குள் அரசு ஊழியர்களுக்கு 5% டிஏ உயர்வு? முழு விவரம்! title=

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவிலேயே அதாவது கிட்டத்தட்ட 2023ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கப்போகிறது.  இந்த நல்ல செய்தியானது ஊழியர்களின் பணப்பையை நிரப்ப போகிறது, ஏனென்றால் மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை பெரிய அளவில் உயர்த்தப்போவதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.  அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாது ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதன் மூலம் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்தது.  இந்த அகவிலைப்படி உயர்வின் மூலமாக கிட்டத்தட்ட 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரியளவில் பயனடைந்துள்ளனர்.  

மேலும் படிக்க | மொபைலில் சார்ஜ் விரைவில் காலியாகிறதா? இந்த ஆப்ஸ்லாம் உடனே டெலீட் பண்ணிடுங்க!

செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு முன்னர் வரை மத்திய அரசு ஊழியர்கள் 34 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வந்தனர். கொரோனா தொற்றுநோய் பரவலின் சமயத்தில் பல துறைகளில் ஏற்பட்ட முடக்கத்தின் காரணமாக அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.  அதுமட்டுமின்றி இந்த சமயத்தில் ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும் அரசு வழங்கவில்லை, இதன் நிலுவை தொகையும் இன்றுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது.  மத்திய அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாகவே தங்களது 18 மாத நிலுவை தொகையை அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜூலை 1, 2021 முதல் அரசாங்கம் அகவிலைப்படியை 11 சதவீதம் அதிகரித்தது.  பிறகு ஜூலை 2021 முதல் அகவிலைப்படி 17ல் இருந்து 28 சதவீதமாக அதிகரித்தது.  தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 38 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.  

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை வீதத்தில், அதாவது ஜனவரியிலும் பின்னர் ஜூலையிலும் என இரண்டு முறை திருத்தங்களை மேற்கொள்ளும்.  தற்போது புத்தாண்டு நெருங்கி வருகிறது, இந்த சந்தோஷமான சமயத்தில் ஊழியர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யும் வகையில் அரசு அவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் என்று கூறப்படுகிறது.  மார்ச் 2023க்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | எல்ஐசி ஜீவன் ஆனந்த்: மாதம் ரூ.1358 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News