சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் மார்ச் மாதத்திற்குள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (SBI) 3,000 ஏடிஎம்களை நிறுவும். SBI தனது அவுட்சோர்ஸ் மாதிரியை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. அவுட்சோர்ஸ் மாடல் அல்லது பிரவுன் லெவல் ஏடிஎம் (BLA) வங்கி சார்பாக ஒரு சேவை வழங்குநரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஏடிஎம்களில் பெரும்பாலானவை வங்கிகளின் கிளைகளுடனேயே இல்லாமல் தனித்தனியாக அமைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3,000 ஏடிஎம்களை நிறுவுவதற்கான உத்தரவு SBI –யிடமிருந்து பெறப்பட்டுள்ளது


சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்சின் தலைவர் மஞ்சுநாத் ராவ் கூறுகையில், 3,000 ATM-களை நிறுவ சிஎம்எஸ்-சுக்கு SBI-யிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளது என்றார்.


ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, சிஎம்எஸ் இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஏடிஎம்களை நிறுவும். பண மேலாண்மை சேவைகளையும் வழக்கமான பராமரிப்பு பணிகளையும் சிஎமெஸ் நிறுவனம் செய்யும். இதன் மூலம், சிஎம்எஸ் தகவல் அமைப்புகளின் கீழ் உள்ள மொத்த பிஎல்ஏ 5,000 ஆக உயரும் என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ: உங்கள் ஊதியம் குறையவுள்ளது, EMI கட்டுவது இனி கடினம்: புதிய விதிகளால் பெரிய தாக்கம்


புதிய ATM-களை அமைப்பதற்கு நிறுவனம் ரூ .200 கோடி முதலீடு செய்வதாகவும், அவற்றை நிர்வகிக்க 2,000 ஊழியர்களை நியமிப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தம் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


SBI தங்கள் வாடிக்கையாளர்களின் (Customers) வசதிகளில் அதிக கவனம் செலுத்தும் ஒரு வங்கியாகும். அவ்வகையில், அவுட்சோர்சிங் மூலம் ஏடிஎம்-களின் எண்ணிக்கையை அதிகரிக்க SBI எடுத்துள்ள முடிவு வாடிக்கையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.


தனது சமீபத்திய ட்விட்டில், SBI வங்கி, கார்டு மற்றும் PIN-ஐப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.



SBI அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நன்மைக்கும் பாதுகாப்பிற்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: ஒரே ஒரு video call மூலம் savings account-ஐத் திறக்கலாம்: IDBI வங்கியின் video KYC


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR