SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை
SBI Net Banking: பெரும்பாலும் மக்கள் வங்கி மோசடிக்கு இரையாவதை நாம் காண்கிறோம். மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறார்கள்.
எஸ்பிஐ நெட் பேங்கிங்: இணைய வசதி நமது வாழ்வில் பல வித சவுகரியங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பல துறைகளில் இதன் தாக்கம் உள்ளது. பல வித பணிகளை இணையத்தின் உதவியால் நாம் இந்த நாட்களில் மிக எளிதாக செய்து முடித்து விடுகிறோம். வங்கிகளின் செயல்முறைகளிலும் இணைய வங்கி வசதி மூலம் நாம் பல வித நன்மைகளை அடைந்துள்ளோம். எனினும், வசதிகள் இருக்கும் அதே நேரம் பல வித இன்னல்களும் இதன் மூலம் ஏற்படுகின்றன.
பெரும்பாலும் மக்கள் வங்கி மோசடிக்கு இரையாவதை நாம் காண்கிறோம். மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறார்கள். ஆன்லைன் வங்கி மோசடிகளும் இதில் அடங்கும். இதன் கீழ், மோசடி நபர்கள், மக்களை அச்சுறுத்தியோ, அல்லது பணத்தாசை காட்டியோ அவர்களை தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். பின்னர், இந்த மோசடிக்காரர்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட இன்னல்களிலிருந்து தனது வாடிக்கையாளர்களை காக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வங்கி மோசடி குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
தவறான எண்ணைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
எஸ்பிஐ தனது ட்விட்டர் கணக்கில் தவறான, போலி எண்களைப் புரிந்துகொள்ளும்படி ட்வீட் செய்துள்ளது. இப்படிப்பட்ட எண்களுக்கு எப்போதும் திரும்ப அழைக்க வேண்டாம் (கால் பேக்) என்றும் எஸ்எம்எஸ்-க்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் உங்கள் தனிப்பட்ட/நிதித் தகவல்களைத் திருடுவதற்கான ஒரு மோசடி வழியாக இருக்கக்கூடும் என வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன் எஸ்பிஐ ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
மேலும் படிக்க | EPFO Update: உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவில்லையா? இதுதான் காரணம்
இந்த விஷயங்களை மனதில் கொள்வது அவசியமாகும்
இந்த வீடியோவில் எஸ்.பி.ஐ., மூலம் போலி எஸ்.எம்.எஸ் மூலம் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு போலி செய்தி வந்தாலும், சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. தவறான எண்ணிலிருந்து செய்தி அனுப்பப்பட்டிருந்தால், அது அதிகாரப்பூர்வ ஐடியிலிருந்து அல்லாமல் தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப்பட்டதா என்பதைச் சரிபார்க்கவும்.
இவற்றை புறக்கணிக்காதீர்கள்
இது தவிர, இதுபோன்ற எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு, யாராவது போன் செய்து, அனுப்பப்பட்ட செய்திக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சொன்னால் அதை கண்டுகொள்ள வேண்டாம் என வங்கி கூறியுள்ளது. SMS அனுப்பி விரைவாக பணம் செலுத்துமாறு யாராவது உங்களிடம் கேட்டால், மிகவும் கவனமாக இருக்கவும். மேலும், அனுப்பப்படும் குறுந்தகவல்களில் இலக்கணப் பிழைகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், இது தவறான, போலியான செய்தி என்பதையும், அந்த எண் போலியான எண் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | விமானத்தில் இனி செல்லப்பிராணிகளுடன் பயணிக்கலாம்: ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ