கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு அட்டைகளை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் கடன் அட்டை பயன்பாட்டை ஊக்குவிக்க வாங்கிகள் பல்வேறு சலுகைகளையும் அறிவிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில், நாட்டின் பெரிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி SBI, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டை விதிகளை சமீபத்தில் மாற்றியுள்ளன. இந்த விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்த வங்கிகளின் பயனர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த மாற்றப்பட்டுள்ள விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ கிரெடிட் கார்டில் புதிய விதிகள்


பேடிஎம் எஸ்பிஐ கிரெடிட் கார்டின் விதிகளை எஸ்பிஐ கார்டு மாற்றியுள்ளது. ஜனவரி 1 முதல் இந்தக் கிரெடிட் கார்டு (Credit Card)  மூலம் கட்டணம் செலுத்தினால் கேஷ்பேக் கிடைக்காது. முன்னதாக நவம்பர் 1 ஆம் தேதி, EasyDiner இலிருந்து ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான வெகுமதி புள்ளிகளை SBI கார்டு 10X என்ற அளவிலிருந்து 5X ஆகக் குறைத்துள்ளது.


ஆக்சிஸ் வங்கியும் கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது


ஆக்சிஸ் வங்கி அதன் கிரெடிட் கார்டுதாரர்களுக்காக சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. ஆக்சிஸ் பேங்க் மேக்னஸ் கிரெடிட் கார்டு நன்மைகள் மற்றும் வருடாந்திர கட்டணங்கள் மற்றும் சேரும் கட்டணங்களை வங்கி மாற்றியுள்ளது. ஆக்சிஸ் வங்கி ரிசர்வ் கிரெடிட் கார்டின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் வங்கி திருத்தியுள்ளது.


ஐசிஐசிஐ வங்கி ஓய்வறை அணுகல் பலனைக் குறைக்கிறது


ஐசிஐசிஐ வங்கி அதன் 21 முக்கிய கிரெடிட் கார்டுகளில் ஏர்போர்ட் லவுஞ்ச் அக்ஸஸ் சலுகை மற்றும் வெகுமதி புள்ளிகளின் விதிகளை மாற்றியுள்ளது. இதனுடன், வெகுமதி விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2024 முதல், ஒரு காலண்டர் காலாண்டில் ரூ. 35000 செலவழித்த பின்னரே, லவுஞ்ச் அக்ஸஸ் வசதி கிடைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு... கடன் வலையில் சிக்காமல் இருக்க சில டிப்ஸ்


HDFC வங்கி கிரெடிட் கார்டில் புதிய விதிகள்


HDFC வங்கி, Regalia மற்றும் Millennia கடன் அட்டைகளின் விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. HDFC வங்கி ரீகாலியா கிரெடிட் கார்டில் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் செலவழித்த பின்னரே இப்போது ஏர்போர்ட் லவுஞ்ச் அக்ஸஸ் சலுகை கிடைக்கும். ஒரு காலாண்டில் நீங்கள் 2 லவுஞ்ச் அக்ஸஸ் சலுகையை பெறுவீர்கள். அதே நேரத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி மில்லினியா கிரெடிட் கார்டு மூலம் காலாண்டுக்கு ரூ. 1 லட்சம் செலவழித்த பின்னரே கிரெடிட் கார்டு வசதியின் பலன் கிடைக்கும். இந்த அட்டை மூலம், நீங்கள் ஒரு காலாண்டில் ஒரு முறை மட்டுமே ஏர்போர்ட் லவுஞ்ச் அக்ஸஸ் சலுகையை பெற முடியும்.


கூடுதல் தகவலுக்கு


அனைத்து நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டுக் கொண்டு கிரெடிட் கார்டுகளை தருவதால், இன்று வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ரிவார்டு புள்ளிகள், சிறப்புச் சலுகைகள் எதுவாக இருந்தாலும், சிறந்த கிரெடிட் கார்டைக் கண்டறிவதன் மூலம், ஒவ்வொரு முறை கிரெடிட் கார்டினை பயன்படுத்தும் போதும், அதன் மூலம் பல சலுகைகளையும் ரிவார்ட் புள்ளிகளையும் பெறலாம். கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல வகைகளில் சலுகைகளை வழங்குகின்றன. எனவே, கிரெடிட் கார்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் கவனமாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். சில குறிப்பிட்ட வகை கிரெடிட் கார்டுகளில், சலுகைகளின்படி ஒரு கார்டுதாரர் ஷாப்பிங் செய்தால், கேஷ்பேக்குகள், தள்ளுபடிகள் அல்லது சலுகைகளை அதிகம் பெறலாம்.


மேலும் படிக்க | UNION BUDGET 2024: சாமானியர்கள் எதிர்பார்க்கும் சில வரிச்சலுகைகள்... நிறைவேறுமா... நிராசையாகுமா...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ