நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க விரும்பினால், எஸ்பிஐ உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI ATM) ஏடிஎம் உரிமையைப் பெறுவதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். குறிப்பாக, வீட்டில் இருந்தபடியே மாதம் 80-90 ஆயிரம் ரூபாய் வரை சுலபமாக சம்பாதிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது சரியான வழி. உங்கள் முதலீட்டுக்கு முழு உத்தரவாதம் இருக்கக்கூடிய சூப்பரான பிஸ்னஸ் வாய்ப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI ஏடிஎம் பிரான்சைஸ்


எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் பிரான்சைஸ் உரிமையை நீங்கள் பெற்று அதன் மூலம் சம்பாதிக்க முடியும். ஏடிஎம்கள் எஸ்பிஐ வங்கி மூலம் நிறுவப்படுவதில்லை. அதற்காக தனி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உரிமையாளராக மாற முடியும். மக்கள் கூட்டம் இருக்ககூடிய இடமாக மட்டும் இருந்தால் போதும். 


மேலும் படிக்க | பணவரவு, மகிழ்ச்சி பொங்க வீட்டில் எந்த சிலைகளை வைக்க வேண்டும்?


நிபந்தனைகள் என்ன?


1. எஸ்பிஐ ஏடிஎம்-ன் உரிமையைப் பெற, உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
2. மற்ற ஏடிஎம்களில் இருந்து அதன் தூரம் 100 மீட்டர் இருக்க வேண்டும்.
3. இந்த இடம் தரை தளத்தில் இருக்க வேண்டும். அந்த இடத்துக்கு நல்ல பார்வை இருக்க வேண்டும் 
4. 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும், இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் கட்டாயம்.
5. இந்த ATM ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் நடைபெறும் இடமாக இருப்பது அவசியம்.
6. கான்கிரீட் கட்டடத்தில் அமைக்கப்பட்ட இடமாக இருப்பது கட்டாயம்.



எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு தேவையான ஆவணங்கள்


1. அடையாளச் சான்று - ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
2. முகவரிச் சான்று - ரேஷன் கார்டு, மின்சார பில்
3. வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
4. புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.
5. ஜிஎஸ்டி எண்
6. நிதி ஆவணங்கள்
7. பிற ஆவணங்கள்



எப்படி விண்ணப்பிப்பது? 


எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவை இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவ ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இதற்காக இந்த அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைனில் லாக் இன் செய்து உங்கள் ஏடிஎம்-க்கு விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ


டாடா இண்டிகேஷ் - www.indicash.co.in
முத்தூட் ஏடிஎம் - www.muthootatm.com/suggest-atm.html
இந்தியா ஒன் ஏடிஎம் - india1atm.in/rent-your-space


மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?


எவ்வளவு சம்பாதிக்க முடியும்?


முதலீட்டின் மீதான வருமானம் ஆண்டு அடிப்படையில் 33-50 சதவீதம் வரை கிடைக்கும். உங்கள் ஏடிஎம் மூலம் தினமும் 250 பரிவர்த்தனைகள் நடந்தால், அதில் 65 சதவீதம் பண பரிவர்த்தனை மற்றும் 35 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை என்றால், மாதம் 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதே நேரத்தில், 500 பரிவர்த்தனைகளாக இருந்தால் சுமார் 88-90 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR