SBI வங்கி அறிவிக்கப் போகும் புதிய VRS திட்டம்; அதற்கு யார் தகுதியானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக புதிய VRS திட்டம் 2020-யை (Voluntary retirement scheme) வெளியிட்டுள்ளது. வங்கியின் இந்த திட்டம் இரண்டாவது இன்னிங் டாப் தன்னார்வ ஓய்வூதிய திட்டம் -2020 (SITVRS-2020) என்றும் அழைக்கப்படுகிறது. தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் பூஜ்ஜிய இருப்புக்கு செலுத்த வேண்டிய அபராதம், கணக்கில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்று தெரியுமா?. 


தற்போது, ​​சுமார் 11,565 அதிகாரிகள் மற்றும் SBI-யின் 18,625 ஊழியர்கள் புதிய தன்னார்வ ஓய்வூதிய திட்டத்திற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வங்கியின் இந்த திட்டத்தின் கீழ், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தின் 50 சதவீதத்தை மீதமுள்ள சேவை நேரத்திற்கு வழங்கப்படும். தகுதியான ஊழியர்களில் 30 சதவீதம் பேர் புதிய திட்டத்துடன் செல்ல முடிவு செய்தால், வங்கி சுமார் 2,170.85 கோடி ரூபாய் மிச்சப்படுத்தும். இது SBI-யின் மிகப்பெரிய படியாகும், இது அதன் ஊழியர்களுக்கும் வங்கிக்கும் பயனளிக்கும்.


ALSO READ | முக்கியமான 4 விதிகளை மாற்றிய SBI... தண்டனையிலிருந்து தப்ப இதை படியுங்கள்!!


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை (Bank jobs) பார்க்கும், ஊழியர்களை சரியாகவும், நிறைவாகவும் பயன்படுத்திக் கொள்ள இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை (VRS) அறிவிக்க இருக்கின்றார். அதோடு செலவுகளைக் குறைக்கவும் இந்த திட்டத்தை அறிவிக்க முடிவு செய்து இருக்கிறார்களாம். இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் டிசம்பர் 1 முதல் பிப்ரவரி மாத கடைசி தேதி வரை திறந்து வைக்கப்பட உள்ளது. 


இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார்


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 25 வருடப் பணியை நிறைவு செய்தவர்கள், 55 வயதானவர்கள், தொடர்ந்து 3 முறை பணி உயர்வு வாய்ப்புகளை தவற விட்டவர்கள்... என சில அடிப்படை விஷயங்களை வைத்து தான் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறார்களாம். இதில் புதிதாக SBI உடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்களும் அடக்கம்.