SBI Life – Saral Pension: எஸ்பிஐ லைஃப் சரல் பென்ஷன் திட்டம், ஓய்வு பெற்ற பிறகும், உங்களுக்கு வழக்கமான வருமானத்தைக் கொடுக்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஒரு சில எளிய முறையில் உங்களுக்கு சிறந்த முதலீடாக இருக்கும். அதோடு, வயது முதிர்ந்த காலத்தில் நிதி சுதந்திரத்தை வழங்குகிறது. ஓய்வு காலத்தில், அதாவது வருமானம் இல்லாத பணி ஓய்வு காலத்தில் வாழ்க்கையை எந்தவித சிரமமும் இல்லாமல் வாழ தேவையான பணத்ததை உங்களுக்கு கொடுக்கும் எஸ்பிஐ லைஃப் சரல் திட்டம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ லைஃப் சாரல் பென்ஷன் (SBI Life – Saral Pension) தகுதி, பிரீமியம் மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். எஸ்பிஐ லைஃப் சாரல் பென்ஷன் பிரபலமான ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும், மேலும் சந்தாதாரர்களுக்கு வழக்கமான வருமானம் மற்றும் நாமினிகளுக்கு மரண பலன்களை வழங்குகிறது. 


ஓய்வூதியத்திற்காக சேமிப்பது என்பது சாதாரணமான வருமானம் கொண்டவர்களுக்கும், குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருப்பவர்களுக்கும் சிரமமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உள்ளவர்கள், எ எதிர்காலத்தைத் திட்டமிடவும் சேமிக்கவும் உதவும் திட்டம் எது என்று ஆவலாக இருப்பார்கள்.


மேலும் படிக்க | நிம்மதியான ரிட்டயர்மெண்ட் வாழ்க்கைக்கு பெஸ்ட் ஓய்வூதிய திட்டம்! டாப் 5 திட்டங்கள்


வரிச் சலுகைகளை பெறுவதற்காகவே பலர் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்து, எதிர்காலத்தையும் ஸ்திரமாக்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ லைஃப் சரல் பென்ஷன் திட்டம் முக்கியமான ஓய்வூதிய திட்டமாக இருக்கிறது.


இது ஒற்றை பிரீமியம், தனிநபர், இணைக்கப்படாத, பங்கேற்காத, உடனடி வருடாந்திர திட்டமாகும், இது வருடாந்திர விருப்பங்களுடன் பலன்களை வழங்குகிறது.


தகுதி
திட்டத்தில் இணைவதற்குக் குறைந்தபட்ச நுழைவு வயது 40 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச நுழைவு வயது 80 ஆண்டுகள். முறையான பிரீமியம் செலுத்தும் திட்டத்திற்கான தேவை இல்லை. சந்தாதாரர் விரும்பியபடி ஆண்டுத்தொகையை மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.


மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை கிடைக்குமா? விஷயத்தை போட்டுடைத்த நிதி அமைச்சக அதிகாரி


தெரிவுகள்
இந்தத் திட்டத்தில் இரண்டு விருப்பங்கள் உள்ளன. 100% வாங்கும் விலை (Return of 100% of the Purchase Price (ROP) விருப்பத் தொகையுடன் கூடிய திட்டம். வருடாந்திரத்தில், சந்தாதாரரின் திடீர் மரணம் ஏற்பட்டால், ஓய்வூதியத் தொகைகள் நிறுத்தப்பட்டு, அது அடுத்த உறவினருக்கு, அதாவது நாமினி/சட்டப்பூர்வ வாரிசுக்கு திருப்பித் தரப்படும்.


கூட்டு ஓய்வூதியத் திட்டத்தில், இருவரும் இறந்த பிறகு, நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு பணம் கொடுக்கப்படும்.  


நன்மைகள்


எந்தவொரு ஓய்வூதியத் திட்டமும் இரண்டு குறிப்பிட்ட நன்மைகளை வழங்குகின்றன. அவை வரிச் சலுகைகள் மற்றும் எளிமை, மேலும் எஸ்பிஐ லைஃப் சரல் பென்ஷன் இரண்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பிரபலமான ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். இது வழக்கமான வருமானம் மற்றும் இறப்புப் பலன்களை வழங்குகிறது, இது மொத்தத் தொகையாகவும் கொடுக்கப்படுகிறது.


இந்தத் திட்டத்தில் செய்யபப்டும் முதலீடுகள் அட்வாண்டேஜ் திட்ட அம்சத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன, இது முதலீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் SBI ஓய்வூதியத் திட்டம் ஆகும். இதனால் ஆபத்து குறைகிறது.


மேலும் படிக்க | இந்த 5 பண பரிவர்த்தனைகளை உற்று நோக்கும் வருமான வரித்துறை: மறைத்தால் வருமான வரி நோட்டீஸ் வரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ