Budget 2024: பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை கிடைக்குமா? விஷயத்தை போட்டுடைத்த நிதி அமைச்சக அதிகாரி

Budget 2024: மக்களை கவரும் வகையில் அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிடுமா? வரி செலுத்துவோருக்கு (Taxpayers) நிவாரண கிடைக்குமா? சாமானியர்கள் பலனடைவார்களா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 9, 2024, 01:33 PM IST
  • ரூ.3 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை.
  • ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீத வரி.
  • ரூ.6 லட்சத்துக்கு மேல் ரூ.9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி.
Budget 2024: பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகை கிடைக்குமா? விஷயத்தை போட்டுடைத்த நிதி அமைச்சக அதிகாரி title=

Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆனால், இது தேர்தல் ஆண்டு என்பதால் இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தல் ஆண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைக்கப்படும் புதிய அரசாங்கம் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. இது வழக்கமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், மக்களை கவரும் வகையில் அரசாங்கம் அறிவிப்புகளை வெளியிடுமா? வரி செலுத்துவோருக்கு (Taxpayers) நிவாரண கிடைக்குமா? சாமானியர்கள் பலனடைவார்களா? 

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations) 

இப்படி பல கேள்விகள் நம்மிடையே இருக்கும் நிலையில், பட்ஜெட் எதிர்பார்ப்புகள் (Budget Expectations) குறித்த ஒரு மிகப்பெரிய அப்டேட் வந்துள்ளது. 2024 இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பின் (New Tax Regime) கீழ் வரி தள்ளுபடியில் எந்த அதிகரிப்பும் இருக்காது என நிதி அமைச்சகத்தின் (Finance Ministry) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, புதிய வரி விதிப்பைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோரின் தனிநபர் வருமான வரிச் சலுகை (Income Tax Rebate) தற்போதைய ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்று ஊகங்கள் எழுந்தன. எனினும், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), புதிய நேரடி வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோருக்கு வருமான வரி தள்ளுபடிக்கான வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தினார். அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. குடும்ப ஓய்வூதியத்திற்கு (Family Pension) 15,000 ரூபாய் விலக்கு அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு (Central Government) அறிமுகப்படுத்தியது.

2023 பட்ஜெட்டில், சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ் நிலையான விலக்கு (Standard Deduction) விதி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க | இந்த 5 பண பரிவர்த்தனைகளை உற்று நோக்கும் வருமான வரித்துறை: மறைத்தால் வருமான வரி நோட்டீஸ் வரும்

பழைய வரி முறையில் (Old Tax Regime) தற்போது சம்பளம் பெறும் ஊழியர்கள் (Salaried Class) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.50,000 நிலையான விலக்கு கிடைக்கிறது.

இருப்பினும், மத்திய அரசு, வெளிநாட்டு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு செலவினங்களுக்கு, மூலதனத்தில் வசூலிக்கப்படும் வரிக்கு (TCS) ஒரு நிதியாண்டிற்கு ரூ. 7 லட்சம் வரை , விலக்கு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கிறது என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

2023 பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிகளை எளிதாக்கும் முயற்சியில் வருமான வரி அடுக்குகள் ஏழில் இருந்து ஆறாக குறைக்கப்பட்டன.

> ரூ.3 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை.

> ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீத வரி.

> ரூ.6 லட்சத்துக்கு மேல் ரூ.9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி.

> ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத வரி.

> ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வரி.

> ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி.

மேலும் படிக்க | Income Tax: சம்பளத்தில் ‘இந்த’ அலவென்ஸ்களுக்கு வரியே கிடையாது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News