புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), ATM-களில் OTP அடிப்படையில் பணம் எடுக்கும் முறையில் நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) முதல் இந்த செயல்முறைக்கு அதிக நேரம் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனி, SBI வாடிக்கையாளர்கள், 10,000 ரூபாய்க்கு மேலான தொகையை, OTP சரிபார்த்தலுக்குப் பிறகு, நாள் முழுதும் எப்போது வேண்டுமானாலும் ATM-மிலிருந்து எடுக்கலாம்.


 ஜனவரி மாதத்தில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்திருந்தது.


OTP- வேலிடேடட் ATM பரிவர்த்தனை எவ்வாறு செயல்படுகிறது?


அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP - வேலிடேடட் ATM பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.


OTP- அடிப்படையிலான பணத்தை எடுக்கும் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், தனது ATM சேவை மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனையில் SBI மற்றொரு அடுக்கு பாதுகாப்பைச் சேர்த்தது.


வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் OTP  பெறப்படும். அங்கீகாரத்தின் இந்த கூடுதல் காரணி, SBI அட்டை வைத்திருப்பவர்களை, அங்கீகரிக்கப்படாத ATM withdrawal-களிலிருந்து பாதுகாக்கிறது.


ALSO READ: Credit-Debit கார்டு பயனர்களின் கவனத்திற்கு... செப்., 30 முதல் மாறும் 5 புதிய விதிகள்!!


யார் சேவைகளைப் பெற முடியும்?


SBI கார்ட் வைத்திருக்கும் ஒருவர் மற்ற வங்கி ATM-களில் பணம் எடுத்தால், அந்த வித பரிவர்த்தனைகளுக்கு இந்த வசதி பொருந்தாது. ஏனெனில், SBI-ன் படி, இந்த செயல்பாடு தேசிய நிதி சுவிட்ச்-ல் (NFS) உருவாக்கப்படவில்லை. NFS, பலவித வங்கிகளின் நடைமுறைகளை ஒன்றாக்கி இயங்கக்கூடிய நாட்டின் மிகப்பெரிய ATM நெட்வொர்க்காகும். மேலும் இது, வங்கிகளுக்கு இடையிலான, உள்நாட்டு ATM பரிவர்த்தனைகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமாகமானவற்றை நிர்வகிக்கிறது.


SBI OTP சேவையின் அடிப்படையில் பணத்தை எவ்வாறு எடுப்பது?


அட்டைதாரர் அவர் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ATM திரையில் OTP Window காண்பிக்கப்படும். வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ இதில் உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்ய வேண்டும். 


ALSO READ: டெபிட் கார்டு மோசடியை தவிர்க்க SBI வெளியிட்ட 10 ATM பாதுகாப்பு மந்திரக் கொள்கை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR