இன்றைய முக்கிய செய்திகள்: மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான், அச்சுறுத்தம் ரஷ்யா, ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட்

தமிழ்நாட்டில் இன்று பல முக்கிய விஷயங்களை நடைபெற உள்ளன. அவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்து இருங்கள். 

Written by - RK Spark | Last Updated : Nov 20, 2024, 01:47 PM IST
    Live: இன்றைய முக்கிய செய்திகள்: தமிழ்நாடு மற்றும் உலக முழுவதும் நடக்க கூடிய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog

தமிழ்நாட்டில் இன்று பல முக்கிய விஷயங்களை நடைபெற உள்ளன. அவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்து இருங்கள். 

20 November, 2024

  • 22:03 PM

    மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்

    ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வில் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர். 

    இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் அவர்களை இணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • 07:27 AM

    அதிமுக எஸ்.பி.வேலுமணி பேச்சு

    தேர்தலுக்குப் பிறகு எடப்பாடியார் போராட்டம் நடத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பிறகு, குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு வீடுகளே கொடுக்காத ஆட்சியாக இருந்து வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Trending News