தொழில் தொடங்க திட்டமா.. 59 நிமிடங்களில் SBI மூலம் முத்ரா கடன் பெறும் எளிய வழி..!!!
தொழில் தொடங்க நினைக்கும் மக்கள், கடனை பெற அதிக முயற்சி செய்யத் தேவையில்லை. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெறும் 59 நிமிடங்களில் கடன் வழங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் காரணமாக வர்த்தகர்களின் நிலை மோசமாகியுள்ளன. லக்டவுன் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவான விற்பனை காரணமாக சிறு வணிகர்களின் வருமானம், கணிசமான அளவிற்கு சரிந்துள்ளது. பல கடைக்காரர்கள் தங்கள் தொழிலைத் தொடர மூலதனத்திற்காகக் கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், தொழில் தொடங்க நினைக்கும் மக்கள், கடனை பெற அதிக முயற்சி செய்யத் தேவையில்லை. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெறும் 59 நிமிடங்களில் கடன் வழங்குகிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வழங்கும் இந்த கடனுக்கு, கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை அல்லது ஒப்புதல் கிடைக்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வாடிக்கையாளர்கள் வீட்டில் ஆன் லைன் மூலம் மூலம் பத்தாயிரம் முதல் ஒரு 10 லட்சம் வரையிலான கடன்களை மிக எளிதாக பெறலாம். இந்த கடனை பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் எஸ்பிஐ (SBI) வழங்குகிறது. கார்ப்பரேட் அல்லாத சிறு / குறு நிறுவனங்களுக்கு ரூ .10 லட்சம் வரை கடன் வழங்கும் இந்த திட்டத்தை பிரதமர் 2015 ஏப்ரல் 8ம் தேதி அன்று அறிமுகப்படுத்தினார்.
எஸ்பிஐ (SBI) வழங்கும் முத்ரா கடன் பெற, வாடிக்கையாளர்கள் https://www.sbiloansin59minutes.com என்ற வலை தளத்திற்கு சென்று தேவையான தகவல்களை உள்ளீடு செய்தால், 59 நிமிடங்களில் கடனை பெறலாம். முத்ரா கடனை பெற, ஒருவர் வங்கி கணக்கில் ஸ்டேட்மெண்ட், புகைப்படம், அடையாள அட்டை, வசிப்பிடம் தொடர்பான ஆதாரம், விற்பனை ஆவணங்கள், சேல்ஸ் கொடேஷன்கள், வணிக ஐடி (business ID), ஜிஎஸ்டி (GST) அடையாள எண், வருமான வரி தாக்கல் செய்த விபரம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ALSO READ | குறைந்த வட்டியில் தங்க கடனை வழங்கும் SBI... விண்ணப்பிப்பது எப்படி?
எஸ்பிஐ வங்கியிடம் முத்ரா கடன் பெறுவதில் வாடிக்கையாளர்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், அவர்கள் தொலைபேசி எண் 022-22740510 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் பிரச்சனையை gm.micofinance@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முத்ரா கடன்களில் மூன்று வகைகள் உள்ளன ஷிஷு முத்ரா கடன், கிஷோர் முத்ரா கடன் மற்றும் தருண் முத்ரா கடன். ஷிஷு முத்ரா கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையும், கிஷோர் முத்ரா கடனில் ரூ .50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாயும், தருண் முத்ரா கடனில் பத்து லட்சம் ரூபாயும் பெறலாம்.
ALSO READ | கிட்டதட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து தப்ப சில நேர்மறை சிந்தனைகள்..!!!